முன்னோர்கள் இந்த 8 ரகசியங்களை மட்டும் யார்கிட்டயும் சொல்லமாட்டாங்களாம்.! வாங்க பார்ப்போம்..!!

ஆன்மீகம்

தனிக் கட்சித் துவங்கப் போவதாக அறிவித்திருக்கும் நடிகர் ரஜினியின் செயல்பாடுகள் குறித்து, அறிக்கை தர உளவுத் துறையினருக்கு முதல்வர் பழனிச்சாமி, உத்தரவிட்டதன் பேரில், அத்துறையினர் தகவல்களை சேகரித்து, அறிக்கை அளித்துள்ளனர். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:


ரசிகர்களோடு படம் எடுத்துக் கொள்வதாக ரஜினி அறிவித்ததும், எழுச்சியோடு சென்னைக்கு திரண்டு வந்தனர் ரசிகர்கள். அதை வைத்து, ரஜினி, தனிக்கட்சி துவங்கப் போவதாக அறிவித்தார். ரசிகர்கள் உற்சாகமாயினர். எப்படி அமைப்புகளை துவங்கி, கட்சியை துவங்குவது என புரியாமல், ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

கட்சித் துவங்கப் போவதாக அறிவித்ததும், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் பலரும், தன்னைத் தேடி வருவர் என, ரஜினி தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிரபலமான; களப் பணியில் தேர்ந்த அனுபவம் உள்ள யாருமே, ரஜினி தரப்பை அணுகவில்லை. இதனால், ரஜினி தரப்பு, உற்சாகம் குன்றி உள்ளது.


தேடி வரும் அனுபவஸ்தர்களை வைத்து, கட்சி கட்டமைப்புகளை எளிதாக, உருவாக்கிக் கொள்ளலாம் என கணக்குப் போட்ட ரஜினியின் எண்ணம் பொய்த்துப் போனதால், அப்செட் ஆகி உள்ளனர்.ரஜினி தரப்பினரை அணுகிய சில திராவிட இயக்கத் தலைவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் இருப்பதால், அவர்களை அனுமதிக்க ரஜினி விருப்பப்படவில்லை. ரஜினி தரப்பைத் தேடிச் சென்ற அவர்களும் அதிருப்தியில் உள்ளனர்.

கட்சி கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு, பண பலம் உள்ள ரசிகர் மன்ற ஆட்கள் பெரிய அளவில் இல்லாதது, யோசிக்க வைத்திருக்கிறது.கட்சித் துவங்குவதாக அறிவித்த பின்பும், நடிகர் கமலும் கட்சித் துவங்கப் போவதாகவும், தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் துவங்கப் போவதாகவும் அறிவித்து இருப்பது, ரஜினி தரப்பை ஏகத்துக்கும் குழப்பி இருக்கிறது.


ரஜினியும், கமலும் கட்சித் துவங்கினால், திராவிட இயக்கத்தின் மேல் அதிருப்தியில் இருக்கும் ஓட்டுக்களில் பிளவு ஏற்படும் என, ரஜினி தரப்பு அச்சப்படுகிறது. அதனால், ரஜினியோடு கமல் இணைந்து செயல்பட வேண்டும் என்று விரும்புகின்றனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.-Source: tamil.eenaduindia