வரவை விட செலவுகள் அதிகரிக்கின்றதா? இந்த சிறு பரிகாரத்தை செய்தால் போதுமாம்.!! பிறகு கோடீஸ்வரர் தான்.!!

ஜோதிடம்

வருமானம் எவ்வளவு வந்தாலும் இன்றைய காலக்கட்டத்தில் போதாமல் செலவுகள் பெருகிக் கொண்டே தான் இருக்கிறது.அதற்காக செலவு செய்யாமலும் இருக்க முடியாது. ஆனால் சம்பாதிக்கும் பணம் அனைத்தும் வீண் விரயம் ஆகிக் கொண்டிருந்தால் நம்மால் சேமிப்பு என்பதை செய்யவே முடியாது.


அப்படி இல்லாமல் நாம் சம்பாதிக்கும் சின்னத் தொகை கூட பல மடங்கு பெருக, நம் வீட்டில் இந்த ஒரு சின்ன பரிகாரத்தை செய்தால் போதுமாம்.இந்த பரிகாரத்திற்கு நமக்குத் தேவையான முக்கியமான பொருள் மண்ணால் ஆன சின்ன மண்சட்டி.

இதற்கு புதிதாக தான் வாங்க வேண்டும். இதற்கு முன் பயன்படுத்தியதை பயன்படுத்தக் கூடாது.அடுத்ததாக இதில் வைக்க வேண்டிய முக்கியமான இரண்டு பொருள் மல்லிகைப் பூ, தாமரை பூ இவை இரண்டிற்கும் பணம், தங்கம் இரண்டையும் ஈர்த்து தங்க வைக்கும் சக்தி அதிகம் உள்ளது.

எனவே இந்த பரிகாரத்திற்கு இவை மூன்றும் கட்டாயமாக தேவை.இந்த பரிகாரம் செய்வதற்கு முதலில் புதிய மண்சட்டியை சுத்தம் செய்து அதில் மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்த பிறகு உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள்.


சட்டியில் மல்லிகை பூக்களை நிரப்பி அதில் ஒரு தாமரை மலரையும் வைத்து விடுங்கள். தாமரை எந்த நிறத்தில் இருந்தாலும் பரவாயில்லை.நீங்கள் சம்பாதிக்கும் பணம் சிறிய தொகையாக இருந்தாலும் பரவாயில்லை வீட்டிற்குள் பணத்தைக் கொண்டு வந்த உடன் முதல் வேலையாக இந்த சட்டியில் வைத்து விடுங்கள்.

ஒரு மணி நேரமாவது பணம் இந்த பானைக்குள் அப்படியே இருக்கட்டும். பின்னர் கற்பூர தீபாரதனை காட்டி மனதிற்குள் இந்த பணம் வீண் விரையம் ஆகாமல் பல மடங்கு பெருக வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பிறகு பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

இதை தொடர்ந்து செய்து வரும் போது பணமானது உங்களிடம் தங்கி பல மடங்கு பெருகுவதுடன், வீண் விரயம் ஆகாதாம்.நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை மட்டும் தான் இதில் வைக்க வேண்டும். கடனாக வாங்கிய பணத்தையோ பிறர் பணத்தையோ அதில் வைத்து விடக் கூடாது கவனமாக கையாளுங்கள்.


அட்சய பாத்திரம் போல் பல மடங்கு பெருகும்.அதே போல் உங்கள் வீட்டில் ஒரு சின்ன குண்டுமணி தங்கம் இருந்தால் கூட இந்த மண்பானையில் போட்டு வையுங்கள். அதுவும் பல மடங்கு பெருகுமாம்.இந்த மண்பானையானது அட்சய பாத்திரம் போல் இதில் சேரும் பொருளை பல மடங்கு பெருகும் என்று சொல்லப்படுகிறது.

அதேவேளை பானையில் இருக்கும் பூக்கள் மட்டும் வாடாமல் இருக்க வேண்டும். பூ வாடி விட்டால் உடனே அந்த பூக்களை எடுத்து விட்டு மறுபடியும் வேறு பூக்களை வைத்து விடுங்கள்.அதோடு இதில் எப்போதும் நகையோ அல்லது ஏதாவது கொஞ்சம் பணமும் இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள்.இந்த மண் சட்டியை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து கற்பூர தீபாராதனை காட்டி வந்தால் வீடு நல்ல செல்வ செழிப்போடு சுபிட்சமாக இருக்கும்.