இலங்கையில் பட்டப்படிப்பு முடிப்பவர்களுக்கு கல்வியமைச்சர் வெளியிட்ட ஓர் மகிழ்ச்சியான செய்தி..!!

செய்திகள்

2028 ஆம் ஆண்டு முதல் தேசிய கல்விப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.அமைச்சில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


முதல் சுற்றில், உயர்தர வெட்டுப்புள்ளி மதிப்பெண் ஊடாக பாடம் வாரியான வெற்றிடங்களின் அடிப்படையில் இளங்கலைப் பட்டதாரிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும்.மூன்று வருட கற்கைக்கு பின்னர் இறுதி ஆண்டில் கற்பித்தல் குறித்த நடைமுறைப் பயிற்சியுடன் தகுதியான ஆசிரியர்கள் வகுப்பறைக்கு அனுப்பப்படுவார்கள்.

மேலும் தேசிய மட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ள எதிர்கால கல்வி அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் மாகாண மட்டத்தில் கல்வியை உயர்த்துவதற்கும் மாகாண மட்டத்திலிருந்து ஆதரவைப் பெறுவதே இந்த சந்திப்பின் நோக்கமாகும்.