வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை..!!

செய்திகள்

வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்கள் தொடர்பில் மோசடிகளுக்கு ஆளாக வேண்டாம் என இலங்கை உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.துருக்கியில் வேலை வாய்ப்புகள் இருப்பதாக கூறி மேற்கொள்ளப்பட்ட போலியான பிரசாரம் காரணமாக அண்மையில் நூற்றுக்கணக்கானோர் கொழும்புக்கு விரைந்த சம்பவத்தை குறிப்பிட்டே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


துருக்கியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு உள்ளூர் உரிமம் பெற்ற முகவர் ஒருவரால், துருக்கியில் உள்ள தனியார் நிறுவனமொன்றின் தனிப்பட்ட தொடர்பு மூலம் இந்த வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள துருக்கி தூதரகத்தால் அல்லது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் இது அறிவிக்கப்படவில்லை என்றும் இலங்கை உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கம் தெரிவித்துள்ளது.


எனவே, பொதுமக்கள் இந்த போலியான சமூக ஊடக செய்திகள் குறித்து அவதானமாக இருக்குமாறும், இவ்வாறான செயல்கள், நாட்டிற்கு அந்நியச் செலாவணியைப் பெறுவதற்கான பொன்னான வாய்ப்பை இழக்கும் என்பதால், குற்றவாளிகளைக் கண்டறிய அரசாங்கம் தலையிடுமாறும் இலங்கை உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.