யாழில் வைரவர் கோவிலினை முற்றுமுழுதாக புத்த விகாரையாக மாற்றியுள்ள இராணுவம்..!! வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்..!!!

செய்திகள்

பலாலியில் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதும் எங்களுக்கு எந்த வாழ்வாதாரமும் இல்லை, சந்தோஷமும் இல்லை என்றும் தாங்கள் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் பலாலி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


இவ்விடயம் குறித்து பலாலி வடக்கு வசாணி பகுதியை சேர்ந்த தேவமலர் என்ற பெண் கருத்து தெரிவிக்கையில்,அண்மைய நாட்களாக பலாலி பகுதியில் விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பான செய்திகளை நீங்கள் அதிகம் பார்த்திருப்பீர்கள். 1990ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக தனது தாய் இடம் பெயர்ந்து சென்றார்.

ஆனால், நாங்கள் இங்கே பிறக்கவில்லை. எங்கள் சொந்த நிலத்தை இப்போது தான் நாங்கள் பார்க்கின்றோம். இங்கு இருந்து இடம் பெயர்ந்த பின்னர் எவ்வளவு துன்பங்களை அனுபவித்தோம்.தற்போதும் அனுபவித்து வருகிறோம். எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத முகாம்களில் தங்க வைக்கப்பட்டோம்.

ஒழுங்கான மலசல கூடம் இல்லை. கிணறு இல்லை, இதற்காக முகாம்களின் அருகில் வசிக்கும் மக்களின் வீடுகளில் சென்றோம். தற்போதும் இங்கு மலசல கூட வசதி, நீர் வசதி, மின் வசதி இல்லாமல் கடற்கரைகளில் நாங்கள் எமது தேவையை பூர்த்தி செய்கிறோம்.

காணிகளை விடுவித்தது எமக்கு மகிழ்ச்சிதான். ஆனால் இன்னும் பல இடங்கள் விடுவிக்க வேண்டியுள்ளது. அந்த மக்களின் சந்தோஷங்களையும் நாங்கள் பார்க்க வேண்டும்.தற்போது காணிகளை விடுவித்தும் எங்களுக்கு எந்த வாழ்வாதாரமும் இல்லை,

வீடு சீரமைப்பதாக இருந்தாலும் காணி துப்புரவாக்குவது என்றாலும் நீங்கள் வழங்கும் பணம் போதுமானதாக இல்லை. இந்த கடற்கரையின் வருமானத்தை நம்பியே நாங்கள் வாழ்கிறோம்.அதுமட்டும்மல்லாமல் விடுவிக்கப்பட்டுள்ள காணிக்குள் வைரவர் கோவிலினை புத்த விகாரையாக இராணுவம் மாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.. விரிவான தகவல் காணொளி வடிவில்..!