மஞ்சள் நிறச் சேலையில் இலங்கை அழகி! காட்டு தீயாய் பரவும் புகைப்படங்கள்!! வர்ணிக்கும் ரசிகர்கள்.!

சினிமா

மஞ்சள் காட்டு மைனா போல் மஞ்சள் நிற சேலையில் ரசிகர்கள் மத்தியில் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஜனனியின் புகைப்படம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.பிக் பாஸ் சீசன் 6 ல் இலங்கை மக்கள் சார்பில் கலந்துக் கொண்டவர் தான் ஜனனி. இவரின் குழந்தைத்தனமான சில நடவடிக்கைகள் ரசிகர்கள் பலரை கவர்ந்து சுமார் 50 நாட்களுக்கு மேல் ஜனனியை பிக் பாஸ் வீட்டில் வைத்திருந்தது.


மேலும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது டாஸ்க்களில் அதிகம் கவனம் செலுத்தி வந்தார், மற்ற நேரங்களில் பாடுவது, நடனம் ஆடுவது என தனக்கென ரசிகர்கள் மத்தியில் ஒரு இடத்தை பிடித்துள்ளார்.இதனை தொடர்ந்து பிக் பாஸ் ஜனனி பிக் பாஸ் சீசன் 6 கடைசி வரை வருவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிஷ்டத்தினால் அவர் குறைவான வாக்குகள் பெற்று பாதிலேயே வெளியேறி விட்டார்.

இவர் வெளியே வந்த பின்னர் இவருக்கான ரசிகர்கள் பட்டாளத்தையும், நிறைய வாய்ப்புகளும் இவருக்கு வந்துள்ளது, இதனால் இவர் இலங்கைக்கு கூட இன்னும் திரும்பவில்லையாம்.இதன்படி, விஜயின் நடிப்பில் வெளியாக இருக்கும் விஜய் 67 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகிய நிலையில் ஜனனி ஆர்மி தற்போதும் செயற்பட ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் ஜனனி அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.இதன்படி, சமூக வலைத்தளங்களில் மஞ்சள் நிற சேலை அணிந்து மஞ்சள் காட்டு மைனாப் போல் காட்சியளிக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், ஜனனிக்கு பலத்த ஆதரவைக் கொடுத்து வருகிறார்கள்.
https://www.instagram.com/p/CoUBAbyvqgl/?utm_source=ig_web_copy_link