நாம் தூங்கும் போது அடிக்கடி ஒரே மாதிரியான கனவு வருபவர்கள் மட்டும் இதனை படியுங்கள்..!!

செய்திகள்

நமக்கு கனவுகள் வருவதையும் அதற்கான காரணங்கள்பற்றியும் நிறைய ஆராய்ச்சி கட்டுரைகள் வலைதளங்களில் உள்ளன. இன்னும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. மனிதன் மட்டுமே கனவு காண்பது இல்லை. விலங்குகளுக்கும் கனவுகள் வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


அப்துல்கலாம் அய்யா வும் நம்மை கனவு காண சொன்னார் அது நம் வாழ்க்கையை வளமாக வாழ்வதற்கு. கனவுகள் வருவதற்கு காரணம் நம்முடைய ஆழ்மனதில் தங்கியுள்ள நிறைவேறாத ஆசைகள் தான். நம் உடலும் மனதும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய விசித்திரமான படைப்பு.

மனம் ஒரு குரங்கு என்பார்கள். ஏதாவதொரு தருணத்தில் நினைத்தவற்றை ஆழ்மனதில் சேமித்து வைத்துக்கொண்டு கனவுகளாக வெளிப்படுத்துகிறது. ஒரு சிலருக்கு Extra sensory perception மூலம் எதிர்காலத்தில் நடக்க இருக்கும் நிகழ்வுகள் கனவுகளாகவும் வருவதுண்டு ( நூறாவது நாள்).


ஒரு சிலருக்கு பூர்வ ஜென்மத்தின் நினைவுகள் (அநேகன்) கனவுகளாக வருவதாகவும் பத்திரிகைகளில் படித்ததுண்டு சினிமாக்களிலும் பார்த்திருப்போம். விடியற்காலையில் காணும் கனவுகள் பலிக்கும் என்று வீட்டு பெரியவர்கள் சொல்வதுண்டு. எதுவாக இருந்தாலும் நாம் நல்ல விஷயங்களை நினைவில் வைத்து கொண்டால் நல்ல கனவுகள் வரும். வாழ்க வளமுடன்