சிலாபம் முகத்துவாரத்தில் நீராடச் சென்ற நிலையில் நீரில் மூழகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.7 வயது மகள், 6 வயது மகன் மற்றும் 35 வயதுடைய தந்தை ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் நீர்கொழும்பு பிரதேசத்தில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சிலாபம் முகத்துவாரத்திற்கு படகில் சென்ற இவர்கள் படகில் இருந்து இறங்கி அங்கு நீராடச் சென்றுள்ள நிலையில் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
