பொதுவாகவே கணவனோ மனைவியோ இருவரில் யாராவது ஒருவர் அல்லது இருவருமே ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுத்துப் போவதில் தான் இவ்வளவு பேரின் வாழ்க்கையும் நமது முன்னோர்களின் வாழ்க்கையும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் வழியாக ஒரு பரஸ்பர புரிதலும் உருவாகிறது.

ஆரம்பத்தில் புரியாமல் எதிர்மறையாக இருந்த சூழலானது பின்னாளில் பக்குவம் அடைகிறது. அந்த பக்குவம் அடைவதற்கு சில எதிர் சூழ்நிலைகள் தேவைப்படுகிறது. ஒருவேளை விட்டுக்கொடுத்தது பெண்ணாக இருந்தால் அந்த ஒட்டு மொத்த குடும்பத்தையும்
குழந்தைகளையும் கணவனையும் சேர்த்து வழிநடத்திச் செல்லும் பெருமை, பக்குவம் அந்த பெண்ணுக்கு சேரும். ஒருவேளை அது ஆணாக இருந்தால் அதுது ஆணுக்கும் பொருந்தும். ஆக மொத்தத்தில் விட்டுக் கொடுத்தவர்கள் தோற்றவர்கள் அல்ல.

விட்டுக் கொடுத்ததனால் அந்த வாழ்க்கையை நடத்தியவர்கள் என்ற காரணத்தினால் அவர்களே உயர்ந்தவர்கள்.அவர்களே திறமைசாலிகள், அவர்களை பக்குவம் அடைந்தவர்கள், அவர்களே வழிகாட்டிகள்,அவர்களே தேரோட்டிகள்
