உங்கள் பெயர் R இல் தொடங்குகிறதா?? அப்போ நீங்க தான் அதிஷ்டசாலி!

செய்திகள்

உங்கள் பெயரின் முதல் எழுத்து உங்களின் ஆளுமையை குறிப்பதாக கூறப்படுகிறது. உங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும், நீங்கள் எப்படிப்பட்ட குணம் கொண்டவர் என்பதை கணிக்க உங்கள் பெயரின் முதல் எழுத்து முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது.


அந்த வகையில், உங்கள் பெயரின் முதல் எழுத்து R-யில் தொடங்கினால் உங்களில் எதிர்காலம் மற்றும் குணம் எப்படி இருக்கும் என இங்கே காணலாம்.நாம் அனைவருக்கும் வெவ்வேறு அர்த்தமுடைய பெயர் இருக்கும். அது, நம்மை வாழ்நாள் முழுவதும் மற்றவருக்கு அடையாளம் காட்டும். அதன்படி, R என்ற எழுத்தின் பின்னால் மறைந்துள்ள அர்த்தத்தையும் உங்கள் பெயரில் முதல் எழுத்தாக இருந்தால் அது, உங்களுக்கு எப்படிப்பட்ட ஆளுமையை தருகிறது என இங்கே காணலாம்.

​R எனும் ஆங்கில எழுத்துநவீன ஆங்கில எழுத்துக்களின் 18-வது எழுத்து ‘R’ ஆகும். R என்ற ஆங்கில எழுத்து பல விதமான குணாதிசயங்களைக் கொண்டுள்ளது. ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஆங்கில எழுத்தான R-யை பெயரின் முதல் எடுத்தாக கொண்டவர்கள் இயல்பாகவே சுயநலவாதிகளாக இருப்பார்கள். அத்துடன் அவர்கள், புதிய விஷயங்களையும் தெரிந்து கொள்ள விரும்புவார்க்கலாம்.

இந்த எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்டவர்கள் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாகவும், புத்திசாலியாகவும் இருப்பார்கள். இதன் காரணமாக, அவர்கள் மற்றவர்களை எளிதில் ஈர்க்கிறார்கள். இவர்கள் மிகவும் புத்திசாலிகள் மற்றும் திறமைசாலிகள்.

இதனுடன், அவர்களின் கடின உழைப்பு குணத்தால், இந்த மக்கள் தங்கள் பணித் துறையிலும் சிறந்த வெற்றியைப் பெறுகிறார்கள். நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். தனது நண்பனுக்காக எதுவும் செய்ய தயங்க மாட்டார்கள்.

​R எழுத்தின் சிறப்பு என்ன?ஒவ்வொரு எழுத்துக்கும் தனி சிறப்பு மற்றும் அடையாளம் இருக்கும். R என்ற ஆங்கில எழுத்து ஆங்கிலம், ரஷ்ய மற்றும் சிரிலிக் எழுத்துக்களில் 18-வது இடத்தைப் பிடித்துள்ளது. கிரேக்கத்தில் 17 வது இடத்தில் உள்ளது. ஹீப்ருவில், 20 வது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், இது முடிவுகளைக் குறிக்கும் எழுத்தாகும். ஆர் என்ற ஆங்கில எழுத்தானது “ர” என்ற உச்சரிப்பை கொண்டுள்ளது.


ஆர் ஆனது ஒரு வட்டம் அல்லது கோளத்தைக் குறிக்கும் சனி கிரகத்தைக் குறிக்கிறது. R என்பது ரஹீம் (Rahim) என்ற பெயருடன் தொடர்புடையது. அதாவது, கருணை (mercy). ஆங்கிலத்தில், இது சாலை என்ற சொல்லைக் குறிக்கிறது. இதன் பொருள், “எந்த சாலைக்கும் முடிவும் இல்லை ஆரம்பமும் இல்லை” என்பதுதான். ஸ்லாவிக் மொழியில் P என்ற எழுத்தை ஒத்த R நெருப்புக்கும் தண்ணீருக்கும் இடையே, குழப்பத்திற்கும் ஒழுங்கிற்கும் இடையேயான போரைக் குறிக்கிறது.

​R-யில் தொடங்கும் பெயரை கொண்ட நபர்களின் இயல்புR என்ற எழுத்துக்கு நிறைய ஆற்றல் உள்ளது. எண் கணிதத்தில் R என்ற எழுத்து எண் 9 க்கு சமமாக கருதப்படுகிறது. இந்த எண் சகிப்புத்தன்மை, புத்திசாலித்தனம் மற்றும் மனிதநேயத்தின் சின்னமாகும்.

மேலும், யதார்த்தமான, சகிப்புத்தன்மை, திறமையான, சுயநிர்ணயம் மற்றும் இரக்க உணர்வு ஆகியவற்றைக் குறிக்கிறது. இது மனிதாபிமானத்தையும் குறிக்கிறது. R என்ற எழுத்தை தங்கள் பெயரில் முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் நிலையான மனநிலை உடையவர்களாக இருப்பார்கள். வாழ்க்கையிலும் வியாபாரத்திலும் தன்னம்பிக்கை கொண்டவர்கள்.


ஒரு வேலை உங்கள் பெயரின் கடைசி எழுத்த R ஆக இருந்தால், தங்கள் திட்டங்களை மிகவும் உறுதியான முறையில் முடிக்கும் திறன் உடையவர்கள். தாமதமின்றி அவற்றை முழுமையாக முடிக்க விரும்புகிறார்கள். R-யில் தொடங்கும் நபர்களுக்கு பொதுவான சில ஆளுமைப் பண்புகள் உள்ளன. அவை என்னவென்று இங்கே பார்ப்போம்.

​சிறந்த ஆளுமை உடையவர்கள்R என்ற எழுத்தில் பெயர் உடையவர்கள், சிறந்த ஆளுமை பண்பு உடையவர்களாக இருப்பார்கள். தலைமை பொறுப்புக்கு ஏற்றவர்களாக இருப்பார்கள். சமூகத்தில் நல்ல செல்வாக்குடன் இருப்பவர்கள். தனக்கு கீழ் உள்ளவர்களை எப்படி வழிநடத்துவது என நன்றாக தெரிந்து வைத்திருப்பவர்கள்.

மற்றவர்களின் எண்ணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். ஒருவரை எப்படி வழிநடத்தல் என தெளிவாக தெரிந்து வைத்திருப்பவர்கள். அனைவரிடமும் அன்பு செலுத்துபவர்கள். அனைவரின் தேவைகளையும் தெரிந்து வைத்திருப்பவர்கள்.

​படைப்பாற்றல் மிக்கவர்கள்ஆர் என்ற எழுத்தில் பெயர் உள்ளவர்கள். இவர்கள் படைப்பாற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். அவர்களின் ஆர்வம் கலை மற்றும் கலாச்சாரத் துறையில் அதிகம் இருக்கும். இவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் இவர்களின் பெயரை கூறும். எந்த செயலை செய்தாலும் நாற்றாக யோசித்து செய்வார்கள். இதனால், அவர்களுக்கு நல்ல பெயரும் பாராட்டும் கிடைக்கும்.

​மிகவும் அன்பானவர்கள்இவர்கள் அனைவரிடமும் அன்பாக இருப்பார்கள். யாரையும் கஷ்டப்படுத்த ஒருபோதும் இவர்கள் விரும்புவதில்லை. தனது குடும்பம் மற்றும் நண்பருக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள். சாத்தியம் இல்லாத விஷயங்களை கூட சாத்தியமாக்கும் திறமை இவர்களிடம் உண்டு. சுயநலவாதிகளாக அவர்கள் எப்போதும் செயல்படமாட்டார்கள்.

மற்றவர்களுக்கு உதவுவதை முழுநேர பணியாக செய்பவர்கள். யாருக்கு உதவி தேவைப்பட்டாலும் ஓடிப்போய் உதவுவார்கள். ரக்கமுள்ளவர்கள் மற்றும் மிகவும் மென்மையானவர்கள். அனைவரையும் அன்பாக பார்ப்பதால், அவர்களின் கேட்ட விஷயங்களை பற்றி இவர்கள் ஒரு போதும் சிந்திப்பதில்லை.


​கோவப்படுபவர்கள்எந்த அளவுக்கு அன்பாக இருக்கிறார்களோ அந்த அளவுக்கு கோபப்படுவார்கள். தன்னை ஏமாத்தியவர்களை பழிவாங்க இவர்கள் கொஞ்சம் கூட யோசிக்க மாட்டார்கள். நல்லது எது, கேட்டது எது என தெளிவாக தெரிந்து வைத்திருப்பார்கள்.

இவர்களுக்கு துரோகம் செய்ய கனவில் கூட நினைக்க வேண்டாம். இல்லையெனில் நீங்கள் வாழ்க்கை முழுக்க வருந்து அளவுக்கு செய்து விடுவார்கள். மிகவும் கடின உழைப்பாளிகள் மற்றும் சிறந்த ஊழியர்களை உருவாக்குகிறார்கள். குறிப்பாக அவர்கள் எப்போதும் சிறந்த யோசனைகளைக் கொண்டு வருவார்கள்.

​பணம் மற்றும் பொருள் மீது நாட்டம் இல்லாதவர்கள்இவர்கள் மனிதர்களையும் அவர்களின் இதயத்தையும் நேசிப்பார்கள். அவர்கள் பணத்தையும் சொத்துக்களையும் எப்போதும் பார்ப்பதில்லை. எனவே, அவர்கள் பெரும்பாலும் தங்களிடம் உள்ள அனைத்தையும் மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் இழப்பார்கள்.

ஏனென்றால், அவர்கள் வாழ்க்கையின் பொருள்சார்ந்த பக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தான் எதையாவது விரும்பினால் அதை பெறுவதற்காக மற்றவர்களை ஏமாற்றுவதற்கு தயங்க மாட்டார்கள்.-News & image Credit: tamil.samayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *