32 வருடங்களாக கிடைக்காத மக்களுக்கு சொந்தமான காணி இன்று மக்களிடம்..! வெளியான மக்களின் ஆதாங்கம்.!!

செய்திகள்

யாழ்.தெல்லிப்பழை பிரதேச செயலா் பல விற்குட்பட்ட வலி,வடக்கு உயா்பாதுகாப்பு வலயத்திலிருந்து சுமாா் 108 ஏக்கா் காணி 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளது.


பலாலி – அந்தனிபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் காணி விடுவிப்புக்கான உத்தரவு பத்திரத்தினை யாழ்.மாவட்ட இராணுவ தளபதி பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜா் ஜெனரல் சுவா்ண போதோட்ட, யாழ்.மாவட்டச் செயலா் அம்பலவாணனா் சிவபாலசுந்தரனிடம் கையளித்துள்ளாா்.

காங்கேசன்துறை – மத்தி (ஜே 234) – 50.59 ஏக்கர், மயிலிட்டி – வடக்கு (ஜே 246) – 16.55 ஏக்கர் , தென்மயிலை (ஜே 240) – 0.72 ஏக்கர், பலாலி – வடக்கு (ஜே 254) – 13.033 ஏக்கர், நகுலேஷ்வரம் (ஜே 226) -28 ஏக்கருமாக, 108 ஏக்கர் காணி மிக நீண்ட காலத்தின் பின்னா் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் மீள்குடியேற்றத்திற்காக 130 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளன. மேலும், விடுவிக்கப்பட்டுள்ள 108 ஏக்கர் காணியில் 13 ஏக்கர் அரச காணியாகும். இந்த காணி யாழ்.வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து 5 இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியிருக்கும் 75 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

நிகழ்வில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினா்களான எம்.ஏ.சுமந்திரன், அங்கஜன் இராமநாதன், மற்றும் வடமாகாணசபை அவைத்தலைவா் சீ.வி.கே.சிவஞானம், மற்றும் ஜனாதிபதியின் செயலாளா் இ.இளங்கோவன்,


பிரதம செயலாளா், யாழ்.மாவட்டச் செயலா், யாழ்.மாவட்ட உதவி அரசாங்க அதிபா், மேலதிக அரசாங்க அதிபா் (காணி), தெல்லிப்பழை பிரதேச செயலா் மற்றும் பொதுமக்கள், படையினா, பொலிஸாா் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *