வீட்டில் செல்வம் பெருகணுமென்றால் வீட்டின் வடக்கு திசையில் இத வையுங்க..!!

ஜோதிடம்

பொதுவாக வீடு கட்டும் போது வாஸ்து சாஸ்திரம் பார்த்து தான் கட்டுவோம். ஏனெனில் வாஸ்துப்படி கட்டப்பட்ட வீட்டில் தான் செல்வம் பெருகும், முன்னேற்றம் ஏற்படும், மகிழ்ச்சி நிலைத்திருக்கும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவரது வீட்டில் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தால், அந்த வீட்டில் பிரச்சனைகள் ஏதும் இருக்காது மற்றும் அந்த வீட்டில் உள்ளோர் தங்களின் தொழிலில் முன்னேற்றத்தைக் காண முடியும்.


அந்த வகையில் திசைகளில் வடக்கு திசை குபேர திசை என்பதால், இந்த திசை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. வாஸ்துப்படி, வீட்டின் வடக்கு திசையில் ஒருசில பொருட்களை வைப்பதன் மூலம், அந்த வீட்டில் செல்வம் பெருகும். வடக்கு பகுதி முக்கியமாக கருதப்படுவதற்கு வேறுசில காரணங்களும் உள்ளன. அதில் சிவனின் உறைவிடமாக கூறப்படும் இமயமலை இந்தியாவின் வடக்குப் பகுதியில் உள்ளதாலும் வடக்கு திசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆகவே தான் வீட்டின் வடக்கு திசையில் சில பொருட்களை வைத்தால், அது அதிர்ஷ்டத்துடன் செல்வத்தையும் தருகிறது. இப்போது அந்த பொருட்கள் என்னவென்பதைக் காண்போம்.

சிவலிங்கம்சிவலிங்கத்தை வீட்டின் வடக்கு திசையில் வைப்பது மிகவும் நல்லது. இப்படி வைப்பதன் மூலம் தேவையில்லாமல் பணம் செலவழிக்கப்படுவது தடுக்கப்படும். ஆனால் வீட்டில் வைக்கும் சிவலிங்கம் கால் அங்குலத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


உலோக ஆமை மற்றும் மீன்வாஸ்துப்படி, உலோகத்தில் செய்யப்பட்ட ஆமை மற்றும் மீனை வீட்டில் வைத்திருப்பது மிகவும் நல்லது. அதுவும் இவற்றை வீட்டின் வடக்கு திசையில் வைக்க வேண்டும். இப்படி வைப்பதன் மூலம் வீட்டின் வறுமை நீங்கி, செல்வம் பெருகும். அதிலும் உலோக ஆமையை வீட்டில் வைத்திருந்தால், வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பை உண்டாக்குவதோடு, வாஸ்து தோஷத்தை நீக்கும்.

லட்சுமி தேவிசெல்வத்தின் கடவுளாக கருதப்படுபவர் லட்சுமி தேவி. இந்த லட்சுமி தேவிக்கு உகந்த திசையாக கருதப்படுவது வடக்கு. வாஸ்துப்படி, வீட்டின் வடக்கு திசையில் தாமரை மலரின் மீது லட்சுமி தேவியின் படத்தை வையுங்கள். இதனால் வீட்டில் செல்வம் பெருகும்.

மண்பானை நீர்வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் செல்வம் நிலைத்திருக்க வேண்டுமானால், வீட்டின் வடக்கு திசையில் ஒரு மண்பானையில் நீரை நிரப்பி வையுங்கள். இப்படி செய்வதன் மூலம், பணப்பிரச்சனை வராது மற்றும் சேமிப்பு அதிகரிக்கும். ஆனால் அந்த குடத்தில் நீர் காலியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீர் குறையத் தொடங்கினால், மீண்டும் நீரை ஊற்றி நிரப்புங்கள்.

பிரமீடுவாஸ்துப்படி, வீட்டில் பிரமீடு இருப்பது நல்லது. முக்கியமாக இது வீட்டில் ஏற்படும் பல பிரச்சனைகளை நீக்கும். அதுவும் வெள்ளி, பித்தளை ஆகியவற்றால் ஆன பிரமீடை வீட்டில் வைத்திருக்க வேண்டும். அதுவும் இந்த பிரமீடை வடக்கு திசையில் வைத்தால், வீட்டில் செல்வம் பெருகும். அதுமட்டுமின்றி, வீட்டில் குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு படிப்பில் கவனத்தை அதிகரிக்கும். அதிலும் இந்த பிரமீடை வீட்டின் ஹாலில் வைத்தால், குடும்ப உறுப்பினர்களிடையே அன்பு அதிகரிக்கும்.


கிளி போட்டோபடிக்கும் குழந்தைகள் வீட்டில் கிளி போட்டோ இருப்பது நல்லது. வாஸ்துப்படி, வடக்கு திசையில் இந்த கிளி போட்டோவை வைத்தால், குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும் மற்றும் படிப்பில் அவர்கள் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

வடக்கு திசையில் இருக்கக்கூடாதவைவீட்டின் வடக்கு பகுதியை எப்போதும் மூடி வைத்திருக்கக்கூடாது. முக்கியமாக இந்த திசையில் கழிப்பறையை வைக்கக்கூடாது. அதேப் போல் கனமான மரச்சாமான்களை வைக்கக்கூடாது. வடக்கு திசை குபேர திசை என்பதால், இந்த பகுதி எப்போதும் காற்றோட்டம் நிறைந்ததாகவும், வாசனையாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும்.

21 thoughts on “வீட்டில் செல்வம் பெருகணுமென்றால் வீட்டின் வடக்கு திசையில் இத வையுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *