கும்ப ராசியினால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமழை தானாம்..!!!

சினிமா

ஜோதிட சாஸ்திரத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கையால் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். அந்த யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் பிப்ரவரி மாதத்தில் கும்ப ராசியில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. திரிகிரக யோகம் என்பது மூன்று கிரகங்களின் சேர்க்கையால் உருவாவதாகும்.


ஏற்கனவே கும்ப ராசியில் சனி பகவான் பயணித்து வருகிறார். அதைத் தொடர்ந்து பிப்ரவரியில் சூரியனும், புதனும் கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார்கள். இதனால் கும்ப ராசியில் திரிகிரக யோகம் உருவாக போகிறது. இந்த யோகத்தால் 3 ராசிக்காரர்கள் நிதி நிலை மற்றும் தொழிலில் முன்னேற்றத்தைக் காணப் போகிறார்கள். இப்போது 2023 பிப்ரவரியில் கும்ப ராசியில் உருவாகும் திரிகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் அநத 3 ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மிதுனம்மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இது அதிர்ஷ்டம் மற்றும் வெளிநாட்டு பயணத்தைக் குறிக்கும் வீடாகும். இதனால் இந்த காலத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். மேலும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். வேலை செய்பவர்கள் தொழில் தொடர்பான பயணங்களை செய்ய வாய்ப்புள்ளது. மேலும் மாணவர்களுக்கு இக்காலம் சிறந்ததாக இருக்கும். தேர்வுகளில் நல்ல வெற்றி பெறுவார்கள்.


கன்னிகன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இது நோய் மற்றும் எதிரிகளின் வீடாகும். இதனால் இக்காலத்தில் நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வரும். மேலும் இக்கால கட்டத்தில் உங்கள் எதிரிகளை நீங்கள் வெல்வீர்கள். வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் அமையும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் பணிபுரிபவர்கள் தங்கள் துறையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

மேஷம்மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இது வருமானம் மற்றும் லாபத்தின் வீடாகும். இதனால் இக்காலத்தில் வருமானத்தில் உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பல வழிகளில் இருந்து பணம் சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பழைய முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *