முடிந்தால் 2 நாள் சோற்றுக்காவது உதவிடுங்கள் நண்பர்களே!. வீதியோரத்தில் இடக்கும் ஒருவகை புல்லைப்புடுங்கி ( திராய் போன்ற புல்வகை) ஒரு நாளுக்கு 1கிலோ,அதை 100ரூபாய்க்கு விற்று காலம் கழிக்கும் இந்த மூன்று

வயதுமுதிர்ந்த தாய்மார்களுக்கும் முடிந்தவர்கள் உதவுங்கள். எங்களுக்கு மகன் புல்லின் பெயர்கூடதெரியாது, ஏதோ மருந்துக்காம் என ஓட்டமாவடிப்பக்கம் இருந்து ஒருவர் 5 நாளுக்கு பிறகு வந்து வாங்கிபோவார், வீட்டில் சாப்பாடு இல்லை,

நாங்கள் யாரிடத்தையும் களவெடுக்கல ரோட்டோரத்தில இந்த புல்லை புடுங்கி சாப்பிடுரம்,
சாப்பாடு இல்லாத நாளில் புல்லை விற்று காசுதாரம் என்று ஊரிலுள்ள கடையில் கடனுக்கு சாமான்வாங்கி எடுப்பம், புல்லை விற்றதும் கடன குடுப்பம் மகன் என்றார்கள். வாகரை மாங்கேணி அண்மித்த பகுதி வீதியோரம்.



