யாழில் பாரிய காற்றினால் பலத்த சேதம்..!! மக்களே அவதானம்..!

செய்திகள்

யாழ்ப்பாணம் பருத்திதுறையில் நள்ளிரவில் வீசிய சுழல் காற்றினால் மரத் தளபாட தொழிலகத்தின் கூரை தூக்கி வீசப்பட்டமையால் சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் மழையில் நனைந்து நாசமாகியுள்ளன.


குறித்த சம்பவம் பருத்தித்துறை, தும்பளைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த புதன் கிழமை பிற்பகலிலிருந்து கன மழை பெய்துவந்தது.இந்த நிலையில் நள்ளிரவு வேளை குறித்த சுழல் காற்று குறித்த மரத்தளபாடத் தொழிற்சாலை சூழலில் வீசியமையால் கட்டிடத்தின் கூரைத் தகடுகள் சேதமடைந்தது.

அத்துடன் கூரைகள் காற்றினால் தூக்கி வீசப்பட்டதனால் மழை நீரில் இயந்திரங்கள் நனைந்து பெறுமதி வாய்ந்த மரத்தள பாட உற்பத்தி இயந்திரங்கள், கணினிகள், நிழற்பட பிரதி இயந்திரங்கள், மின் இணைப்பு சாதனங்கள் என்பன சேதமாகியுள்ளது.இந்நிலையில் சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் மழையில் நனைந்து நாசமாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *