இந்த 5 ராசிக்காரங்க பிறக்கும்போதே சமையல் நிபுணராக பிறந்தவர்களாம்…இவங்கள கல்யாணம் பண்றவங்க அதிர்ஷ்டசாலிகளாம்!

ஜோதிடம்

சமைப்பது ஒரு கலை, அதில் தேர்ச்சி பெற நிறைய பயிற்சியும், முயற்சியும் தேவை. சிறந்த சமையல்காரர் என்பவர் உணவுகள், சுவை மற்றும் பல்வேறு சமையலறை பொருட்கள் பற்றி ஆழ்ந்த அறிவைக் கொண்டவராகக் கருதப்படுகிறார். இந்த அறிவு, நமது சுவை மொட்டுகளை திருப்திபடுத்தும் வகையில், இறுதியான பர்பெக்ட்டான ஒரு உணவைத் தயாரிக்க அவர்களுக்கு உதவுகிறது.


உண்மையில், ருசியான ஒன்றை சமைக்க எப்போதும் நிறைய அறிவு அல்லது பயிற்சி தேவையில்லை. ஏனெனில் சிலருக்கு சுவையான உணவை சமைக்கும் திறன் இயற்கையாகவே உள்ளது. அவர்கள் இயற்கையாகவே இந்த திறன் இருப்பதால் அவர்களுக்கு கடினமான பயிற்சிகள் தேவையில்லை. ஜோதிட சாஸ்திரத்தின் படி, சில ராசிகளில் பிறந்தவர்கள் சிறந்த சமையல் கலை நிபுணராக இருப்பார்கள். அவர்கள் யாரென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்சமையல் என்று வரும்போது, ரிஷப ராசிக்காரர்கள் எப்போதும் பட்டியலில் முதலிடத்தில் இருப்பார்கள். அவர்கள் சமைப்பதில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் மற்றும் தங்கள் கைகளால் தயாரிக்கப்பட்ட சுவையான உணவின் மூலம் தங்கள் விருந்தினர்களை மகிழ்விக்க விரும்புகிறார்கள். ரிஷபம் ராசிக்காரர்கள் விருந்து அல்லது சிறிய கூட்டத்திற்கு சமைக்க நேர்ந்தால், அவர்கள் எப்போதும் சொந்தமாக உணவை சமைப்பார்கள்.

கன்னிகன்னி ராசிக்காரர்கள் அனைத்து இராசி அறிகுறிகளையும் விட பரிபூரணவாதிகளாக இருப்பார்கள். சரியான சுவை மற்றும் நிறத்தை அடைய சமையலுக்கு என்னென்ன சேர்க்க வேண்டும் என்று அவர்கள் நன்கு அறிவார்கள். ஒவ்வொரு விவரத்தையும் சரியானதாகவும் சிறந்ததாகவும் மாற்ற அவர்கள் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள். எனவே கன்னி ராசியினரின் இந்த குணம் அவர்களை சிறந்த சமையல் நிபுணராக மாற்றுகிறது.


மகரம்மகர ராசிக்காரர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட, வரிசைப்படுத்தப்பட்ட மற்றும் அனைத்திலும் முழுமையைத் தேடுபவர்கள். அவர்கள் ஆரோக்கிய உணர்வுள்ளவர்கள், அவர்கள் எப்போதும் வீட்டு உணவையேத் தயாரிக்க விரும்புவார்கள், ஏனெனில் ஆரோக்கியம் அவர்களின் முக்கிய தேவையாகும். எனவே தங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் எந்த உணவையும் கடையில் இருந்து ஆர்டர் செய்ய மாட்டார்கள். தங்களுக்கு நெருக்கமானவர்களுக்காக சமைப்பது அவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று.

கடகம்அனைவரின் மீதும் அக்கறை மிகுந்த கடக ராசிக்காரர்கள் இயற்கையாகவே சமையலில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை அவர்கள் எப்போதும் வசதியாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். அவர்கள் எப்போதும் தங்கள் பாட்டியின் சமையல் குறிப்புகளைப் பின்பற்றி தாங்களாகவே உணவுகளைத் தயாரிக்க விரும்புவார்கள்.


துலாம்துலாம் ராசிக்காரர்கள் உணவின் மீது அலாதிப் பிரியம் கொண்டவர்கள். எனவ உணவின் மீதான அவர்களின் அன்பு அவர்களைச் சமைக்க தூண்டுகிறது. சரியான அளவையும் ,சுவையின் தரத்தையும் பராமரிப்பதன் மூலம் தங்கள் சமையலை எவ்வாறு சிறப்பாக்குவது என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் புதுப்புது உணவுகளை சுவைக்க விரும்புகிறார்கள் மற்றும் புதுப்புது சமையல் குறிப்புகளை உருவாக்க விரும்புகிறார்கள்.

25 thoughts on “இந்த 5 ராசிக்காரங்க பிறக்கும்போதே சமையல் நிபுணராக பிறந்தவர்களாம்…இவங்கள கல்யாணம் பண்றவங்க அதிர்ஷ்டசாலிகளாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *