பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலமான ஆசிரியர் வெற்றிடங்களுக்கான சிவில் சேவை பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் உள்ள சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழி ஆசிரியர் வெற்றிடங்களுக்கு அரச பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை – 2023 நடைபெற்று ஆசிரியர் வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளன.

மேற்படி போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் 27.01.2023 அன்று வர்த்தமானியில் கோரப்பட்டுள்ளதுடன் விண்ணப்பிப்பதற்கான கடைசித் திகதி 10.02.2023 ஆகும். இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிப்பதற்கு என்ற இணையத்தளத்திற்குச் சென்று பரீட்சைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Click Application Form
