இலங்கையில் வட பகுதியில் மறைந்திருக்கும் தமிழரின் மறைக்கப்பட்ட வரலாறு..!! வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டுவந்த யாழ் இளைஞர்கள்..!! ஒவ்வொரு ஈழத்தமிழனும் பார்க்க வேண்டிய பதிவு..!!

செய்திகள்

தமிழர்களே நீங்கள் பணத்தை செலவிட்டு தென்னிலங்கைக்கு சுற்றுலா செல்கின்றீர்கள்.அதனையும் விட அழகான இடம் ஒன்று உள்ளது இன்றே படையெடுங்கள்.அதுதான் வன்னிமாவட்டமான நெடுங்கணி பிரதேசத்தில் அமைந்திருக்கும் அழகிய மலையுடன் சேர்ந்த பழைய கோயில்.எங்கள் தமிழர் பிரதேசத்தில் வெடுக்குநாறி மலை என்று ஒன்றுள்ளது என்று உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ??


வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் ஒலுமடு பாலமோட்டை கிராமத்தில் இருந்து கிட்டத்தட்ட 3 km தொலைவில் வெடுக்குநாறி மலை அமைந்துள்ளது .சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இந்த மலையின் வரலாறானது பல வரலாற்று சிறப்புக்களை கொண்டு காணப்படுகின்றது .300 m உயரமான வெடுக்குநாறி மலை அடிவாரத்தின் கீழ் தமிழ் பிராமிய கல்வெட்டிக்கள் மற்றும் வட்டெழுத்துக்கள் போன்றவற்றை காண முடியும் .

மலையின் உச்சியில் ஆதிலிங்கேஸ்வர்ர் எனும் சிவனுடைய லிங்கம் அமைந்துள்ளது . கிட்டத்தட்ட 5 தலைமுறையினருக்கு மேலாக இப்பிரதேச மக்கள் இந்த ஆலயத்தை வழிபட்டு வருகின்றனர்.2018 ஆம் ஆண்டில் இலங்கை தொல்லியல் திணைக்களம் மற்றும் வனவள திணைக்களத்தினர் இம்மலைக்கு மக்கள் சென்று வழிபாடுகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது .


ஆனாலும் உள்ளூர் மக்களின் எதிர்ப்பினை அடுத்து இத்தடையினை நெடுங்கேணி காவல் துறையினர் தற்காலிகமாக நீக்கி வழிபாடுகளை மட்டும் மேற்கொள்ள அனுமதித்திருந்தார்கள்.விதிக்கப்பட்ட தடையானது நீதிமன்றத்தினால்

நேற்று முன்தினம் நீக்கப்பட்டதை அடுத்து நேரில் சென்று பார்வையிடுவதற்கும் வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் எங்களிற்கு சந்தர்ப்பம் கிடைத்தது .அங்கு , பிராமிய கலவெட்டுக்கள் , வட்டெழுத்துக்கள் ,, மர்மக்கேணி , இராஜ நாக குகை , மலையின் உச்சியில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆகியவற்றை பார்க்கமுடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *