உங்கள் வீட்டில் எலக்காய் இருந்தால் பண வரவு அதிகமாகுமாம்..!! இவ்வாறு செய்து பாருங்கள்.!

ஜோதிடம்

இன்றைய காலக்கட்டத்தில் ஒரு மனிதனின் அத்தியாவசிய தேவையே பணமாக்கி விட்டது. இந்த பணம் தாராளமாக நம் கையில் புழங்க சுக்கிரனின் அருள் நிச்சயம் தேவை.குடும்பம் எப்போதும் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக அங்கு பணவரவானது தடையில்லாமல் இருக்க வேண்டும்.


ஒருவருக்கு நல்ல பண வரவுடன் குடும்பம் மகிழ்ச்சியாகவும், அதே நேரத்தில் நல்ல முக பொலிவுடன் கம்பீரமாகவும் வாழ வேண்டும் என்றால் அங்கு சுக்கிரன் பகவானின் அருள் கட்டாயமாக தேவை.இந்த ஏலக்காய் பரிகாரத்தை செய்யும் போது சுக்கிரன் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

இந்த பரிகாரம் செய்வதற்கு இரண்டு பெரிய கருப்பு நிற ஏலக்காய் வேண்டும். இந்த பரிகாரத்தை வெள்ளிக் கிழமை அன்று தான் செய்ய வேண்டும்.சுக்கிரனின் அருள் கிடைக்க வேண்டும் என்றால் அந்த நாளில் செய்வது தான் சிறப்பு.


ஒரு கோப்பை சுத்தமான குடிநீரை எடுத்து அதில் இரண்டு பெரிய ஏலக்காவை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.இந்த ஒரு டம்ளர் தண்ணீர் அரை டம்ளர் ஆகும் வரை கொதித்த பிறகு அந்த தண்ணீரை குடிக்க வேண்டும். இவ்வளவு தான் இந்த பரிகாரம்.

ஆனால் இதை வாரம் வாரம் வெள்ளிக்கிழமை அன்று தவறாமல் செய்து வர வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம் ஜாதகத்தில் சுக்கிரன் நீட்சியாக இருந்தால் அந்த பிரச்சனை கூட சரியாகி விடும் என்று சொல்லப்படுகிறது.


இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வரும் போது நல்ல பணவரவுடன், குடும்பம் சண்டை, சச்சரவு இல்லாமல் நிம்மதியாக இருக்கும்.அது மட்டும் இல்லாமல் முகம் நல்ல பொலிவுடன், கம்பீரமான தோற்றத்தையும் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.இந்த ஒரு பரிகாரத்தை செய்யும் போது நம் பெரும்பாலான பிரச்சனைகள் தீர்த்து விடும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த பரிகாரத்தோடு ஐந்து சின்ன ஏலக்காய் அதாவது நாம் சமையலுக்கு பயன்படுத்தும் ஏலக்காய் எடுத்துக் கொள்ளுங்கள்.இதை உங்கள் பையில் வைத்து விட்டால் எப்பொழுதும் பணவரவானது தடை இன்றி வந்து கொண்டே இருக்கும்.

அது மட்டுமின்றி வீண் விரயங்களையும் இது தடுத்து விடும்.இந்த ஏலக்காயை வாரம் வாரம் வெள்ளிக்கிழமை அன்று மாற்றி விட வேண்டும். இதை மாற்றும் போது பழைய ஏலக்காயை கால் படாத இடத்தில் போட்டு விட்டு புதிய ஏலக்காய் பையில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த பரிகாரமும் நல்ல பணவரவை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *