இலங்கை வாழ் மக்களுக்கு அரிய வாய்ப்பு..!! வாழ்நாளில் ஒரு நாள் மாத்திரமே பார்க்கலாம்.! அரிய வாய்ப்பினை தவறவிடாதீர்கள்.!!

செய்திகள்

வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே காணக்கூடிய அரிய பச்சை வால் நட்சத்திரம் பூமிக்கு மிக அருகில் நாளை மறுதினம் (01) வரவுள்ளதாக வானியலாளர்கள் கூறியுள்ளனர்.C2022E3, அல்லது ZTF எனும் இந்த வால் நட்சத்திரம் இறுதியாக 50,000 ஆண்டுகளுக்கு முன்பு நியண்டதால் மனிதனின் இறுதி காலத்தில் அவதானிக்கப்பட்டது.


இந்த பிரகாசமான பச்சை நிற வால் நட்சத்திரம் நாளைமறுதினம் மற்றும் பெப்ரவரி 2 ஆம் திகதி பூமியில் இருந்து 45 மில்லியன் கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் என கூறப்படுகின்றது.about:blank

இந்நிலையில் , தென் திசையாக தொலைநோக்கியின் உதவியுடன் இதை பார்க்க முடியும் என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த வால் நட்சத்திரம் தற்போது நமது சூரிய மண்டலத்தின் வழியாக வேகமாக நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது.


அதேசமயம் இந்த பச்சை நிற வால் நட்சத்திரம் 50,000 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தோன்றாது என்று பிரிட்டனின் கிரீன்விச் ரோயல் ஒப்சர்வேட்டரியின் வானியலாளர் கலாநிதி கிரெக் பிரவுன் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *