எந்த சம்பாத்தியமும் இலகுவாக கிடைக்காது என்பது எனது கருத்து. ஆனால் ஆன்லைன் மூலம் நம்பகமாக பணம் சம்பாதிக்க பல இணையதளங்கள் உள்ளன, நான் அவற்றிலெல்லாம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன்.

YouTube…தொடர்ந்து வீடியோக்கள் போடுவதன் மூலம் நீங்கள் ஒரு வருட காலத்திற்கு பிறகு மாதம் குறைந்தது ஆயிரம் ரூபாயிலிருந்து பத்தாயிரம் ரூபாய் வரை சம்பாதிப்பதற்கான வாய்ப்பு உண்டு. உங்களது உழைப்பு மேலும் தொடரும்போது இந்த வருமானமும் உயரும்.
eBook…உங்களுக்கு எழுத்தில் ஆர்வம் இருந்தால் நீங்கள் புத்தகங்கள் எழுதலாம். மிக எளிதாக 15 பக்கங்கள் நீங்கள் எழுதினாலே அதை ஒரு புத்தகமாக அமேசான் நிறுவனம் ஏற்றுக் கொள்கிறது. இதன் மூலம் காலாகாலத்திற்கும் நீங்கள் 70 சதவீதம் வரை ராயல்டி பெறுவதற்கான வாய்ப்பும் உண்டு. அதாவது நூறு ரூபாய்க்கு விற்கக்கூடிய புத்தகத்திற்கு 70 ரூபாய் அளவுக்கு நீங்கள் ஒவ்வொரு விற்பனைக்கும் பணம் சம்பாதிக்க வாய்ப்பு உண்டு.
Affiliate Marketing.. இது ஒரு சாதாரண மார்க்கெட்டிங் அணுகுமுறைதான். நமக்கு சொந்தமில்லாத அதேநேரத்தில் மற்றவர்களால் உருவாக்கப்பட்ட மக்களால் நன்கு மதிக்கப்படும் பொருளை நீங்கள் வெற்றி கொடுப்பதன் மூலம் கமிஷன் பெறுவது அப்ளியேட் மார்க்கெட்டிங் எனப்படும். இந்த மார்க்கெட்டிங் முழுவதும் ஆன்லைனில் பண்ண படுவதாகும்.

இந்த மார்க்கெட்டிங் கை நீங்கள் உலகத்தில் எந்த நாட்டிலும் செய்யலாம். பலர் இந்தியாவிலிருந்து கொண்டு இந்தியாவில் அப்ளியேட் மார்க்கெட்டிங் செய்கிறார்கள் ஆனால் நான் தனிப்பட்ட முறையில் என்ன செய்கிறேன் என்றால் இந்தியாவில் இருந்துகொண்டு அமெரிக்க நாட்டில் நாட்டில் தயாராகும் பொருட்களை அமெரிக்கர்களுக்கு விற்று அமெரிக்க டாலர்களில் கமிஷன் பெறுகிறேன். இந்தியாவில் செய்தாலும் அமெரிக்காவில் செய்தாலும் ஒரே மார்க்கெட் வேலைதான் ஆனால் வரக்கூடிய வருமானத்தில் மட்டுமே மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.
இது போன்ற ஒரு சில இணையதளங்கள் மூலம் நீங்கள் தொடர்ந்து சம்பாதிக்க வாய்ப்பு உண்டு. ஒரு வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்துவதற்கு எவ்வளவு பணம் தேவையோ அவ்வளவு மற்றும் அதற்கும் அதிகமாக சம்பாதிப்பதற்கான வாய்ப்புண்டு ஆனால் இணையதளம் மூலம் வரும் வருமானத்திற்கு அதிகம் உழைக்க வேண்டியது இல்லை என்று நினைத்து உங்கள் மனதில் சிறிதும் இருக்கக்கூடாது உழைப்பதற்கு தயாராக இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக உங்களுக்கு அதற்கான பலன் கிடைக்கும்.

இந்த ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளில் இருக்கும் மிகப்பெரிய சோதனை என்னவென்றால் ஆரம்ப காலகட்டத்தில் உங்களுக்கு பணம் வராது ஆனால் நீங்கள் உழைப்பை போட்டுக் கொண்டே இருக்க வேண்டும் ஒரு ஆறுமாதம் ஒருவருடம் கழித்து உங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பணம் வர ஆரம்பிக்கும் என்பதையும் நினைவில் கொள்ளவும்.