இதற்காக ஐந்து அறிகுறிகளைப் பட்டியலிட்டுள்ளது . இந்தக் ஐந்து அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று உங்களிடம் இருந்தால், நீங்கள் ஒரு செலவாளி. உங்களுடைய கை ஓட்டைக் கை.நம்முடைய கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு.

முட்டையிடும் கோழிக்குத்தான் அதனுடைய வலி தெரியும். நீங்கள் ஒரு பொருளை ரொக்கமாகப் பணம் கொடுத்து வாங்கும் பொழுது, செலவு கட்டுக்குள் இருக்கும். அதுவே கடன் அட்டை மூலம் வாங்கும் பொழுது நம்மை மீறி செலவு செய்து விடுவோம்.
பணப் பரிவர்த்தனையின் பரிசு இது. கிரிடெட் கார்ட் மூலம் வாங்கிய பொருளுக்குப் பணம் கட்ட இயலவில்லை எனில் அது உங்களுடைய அதிகம் செலவழிக்கும் பண்பை உலகத்திற்கு எடுத்துக் காட்டி விடும். இத்தகைய சூழலில் சிறிது பணத்தைக் கட்டி கடன் அட்டை செயலிழப்பதை தடுக்கலாம். எனினும் மீதியுள்ள பணத்திற்குக் கடன் அட்டை நிறுவனம் அதிக வட்டி விதிக்கும். இந்த வட்டி கூட்டு வட்டி ஆகும்.
அது அடுத்த மாத சுழற்சியில் அதிகப் பாதிப்பை ஏற்படுத்தி விடும். உங்களுடைய கடன் மதிப்பு அதல பாதாளத்திற்கு சென்றுவிடும். கடன் அட்டை நிறுவனம் உங்களுடைய சிபில் மதிப்பெண்ணிலும் கை வைத்து விடும்.

பணம் பற்றாக்குறை காரணமாக நீங்கள் செலுத்த வேண்டிய பில்களை மிகவும் தாமதமாகச் செலுத்துவது, .நீங்கள் வரவுக்கு மீறி செலவழிக்கின்றீர்கள் என்பதைக் குறிக்கும்.செலவினங்களை எப்பொழுதும் பல்வேறு வகைகளாகப் பிரித்துப் பட்ஜெட் போட்டு அந்த எல்லைக்குள் செலவழிக்க வேண்டும்.
பில்லுக்குறிய பணத்தைச் செலுத்துகிறது என்பது ஒரு முக்கியமான செலவாகும். அதற்குரிய பணத்தை உங்கள் பட்ஜெட்டில் இருந்து செலுத்த இயலாமல் போனால், நீங்கள் வேறு எங்கோ தேவையில்லாமல் செலவு செய்கின்றீர்கள் என்று அர்த்தம்.

அவசர தேவைக்கு ஓய்வூதியக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துச் செலவு செய்யும் நிர்பந்தத்திற்குத் தள்ளப்படுகின்றீர்கள் என்றால் நீங்கள் செலவாளி. ஓய்வூதியத்தில் கை வைக்கக் கூடாது.
அவசரக் காலத்தில் கடன் கொடுக்கும் நிறுவங்களின் தூண்டிலில் போய் மாட்டிக் கொண்டால் இதிலிருந்து வெளி வருவது மிகவும் கடினம்.
ஏனெனில் இந்தக் கடன்களுக்கு மிக அதிக வட்டி விதிக்கப்படுகின்றது.உறவுகளிடம் இருந்து கடன் வாங்குகிறீர்களா? இந்த பணப் பரிவர்த்தனையில் ஒருபோதும் ஈடுபடக் கூடாது. இது உறவுகளை முறித்து விடும். உறவுகளை உருவாக்குவதற்கும் நண்பர்களைப் பேணிக்காப்பதற்கும் முயற்சி தேவை. இதில் பணம் சம்பந்தப்பட்டால், சூழ்நிலைகள் வேறு விதமாக மாறும். எனவே, எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.