யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் விஞ்ஞானப் பிரிவு மாணவி ஒருவர் நேற்று முன்தினம் இரவு மின் தடை ஏற்பட்டபோது கை விளக்கு ஒன்றை தயார் செய்து தனது கற்கையை தொடர முற்பட்டுள்ளார். இதன்போது விளக்கு

தவறி வீழ்ந்து மேசையின் அருகே இன்றைய பரீட்சைக்கு தயார் நிலையில் இருந்த அனுமதி அட்டை மற்றும் அடையாள அட்டை என்பன தீயில் அகப்பட்டுள்ளது. இதனால் மாணவி மனம் உடைந்தபோதும் பெற்றோர் உடனடியாக பாடசாலை அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இதனையடுத்து இரவோடு இரவாக அதிபர் கல்விப் பணிப்பாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாற்று அனுமதி அட்டை, அடையாள அட்டை என்பன உடன் தயாரிக்கப்பட்டு குறித்த மாணவி பரீட்சைக்குத் தோற்றினார்.