பார்த்தவர்களை கண்கலங்க வைத்த அற்புத காதல் திருமணம்!

செய்திகள்

திங்களில் ஆரம்பித்து சனியில் முடிந்து விடுகிறது இன்றைய இளைஞர்களின் காதல் என ஏளனம் செய்பவர்கள் முகத்தில் கரியை பூசும் வகையிலான காதல் இது.நூற்றில் சிலர் செய்யும் தவறுக்காக அனைவரையும் குற்றம் கூறுவது, உண்மை காதலே இல்லை என்பதெல்லாம் தவறு என்பதை நிரூபிக்கும் காதல் இது.


பீட்டர்சன் (25), ஹன்னா (23) இருவரும் தங்கள் திருமண நாளுக்காக ஆவலாக காத்திருந்தனர். இவர்கள் இருவரும் இவர்களது பிறப்பிடமான வடக்கு அயர்லாந்தில் பதின் வயதில் பார்த்துக் கொண்டவர்கள். இவர்களது திருமணம் வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயம் ஆகியிருந்தது.

யாரும் எதிர்பாராத விதமாக திருமணத்திற்கு ஐந்து வாரங்களுக்கு முன்பாக ஒரு கார் விபத்தில் ஹன்னா படுகாயம் அடைந்தார். இவரது இடுப்பு பகுதியும் பாதிக்கப்பட்டது. நுரையீரல் வரை காயங்கள் உண்டாகின. விலா எலும்புகளும் உடைந்தன.ஹன்னா குணமடைய வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அதற்கு சில மாதங்கள் ஆகும். வீல் சேரில் அமர்ந்திருந்தாலும் கூட அவருக்கு வலுமையான வலி இருக்கும் என மருத்துவர்கள் கூறினார்.


அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துவ ஆலயத்தின் நடுவே இருப்பக்கமும் மலர்கள் தூவ தான் நடந்து சென்று திருமணம் செய்யும் அந்த அற்புத நிகழ்வு தகர்ந்து போனதென எண்ணினார் ஹன்னா. இதற்காக இவர் பலமுறை பயிற்சி எடுத்ததாகவும் கூறியிருக்கிறார்.

ஹன்னாவின் கனவு தகர்ந்து தான் போனது. ஆனால், நடந்த சம்பவமோ, ஹன்னா கண்ட கனவை விட மிகவும் அழகானது. ஆம், ஆலயத்திற்கு வெளியே ஹன்னாவின் தந்தை அவரை வில் சேரில் அழைத்து வர. மணமகன் பீட்டர்சன் வெளியே வந்து தனது எதிர்கால மனைவியை அழகாக தூக்கி சென்று உள்ள சென்று திருமணம் செய்தார்.

நான் விரும்பியது போன்று நடந்து சென்று திருமணம் செய்துக் கொள்ள முடியாமல் போனதற்கு நான் அழவில்லை. அதை விட அழகாக எனது திருமணம் நடந்ததை கண்டு மகிழ்ந்தேன் என்கிறார் ஹன்னா. பீட்டர்சன் ஹன்னாவை தாங்கி பிடித்துக் கொள்ள


ஒரு காலில் பேலன்ஸ் செய்து திருமண வைபவம் நடந்துள்ளது.ஹன்னா மெல்ல, மெல்ல நலமடைந்து வருகிறார். ஒருவரின் ஆரோக்கியம் மருந்து உணவுகளில் மட்டுமல்ல, காதல், அன்பு காட்டும் உறவுகளாலும் என்பதை எடுத்துக் காட்டுகிறது பீட்டர்சன் – ஹன்னாவின் காதல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *