காதல் பற்றி யாருமே அறியாத சில உண்மை தகவல்கள்..!!

செய்திகள்

ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் உள்ள உண்மையான அன்பை விட வேறு எதுவும் உணர்வுப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்று அதை அனுபவிப்பவர்கள் சொல்வார்கள். எதிர்பாலினத்தைச் சேர்ந்த ஒருவருடன் பெரும்பாலான


நேரத்தைக் கழிப்பதோடு மட்டுமல்லாமல், உங்களுடைய நண்பர்கள் மற்றும் பிற உறவினர்களை விட அதிகமான பிணைப்புடனும் இருப்பீர்கள்.காதல் அனைத்தையும் வென்று விடும், எதுவாக இருந்தாலும்! இந்த ஒரு வார்த்தை, பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது. இங்கு காதல் எப்போது பூக்கும், எதனால் வருகிறது என்று கொடுக்கப்பட்டுள்ளது.

ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையிலான அன்பு உடல் ரீதியான கவர்ச்சியினாலும் வரும் என்றும் சொல்லலாம். ஏனெனில், ஆண் மற்றும் பெண் இருவருக்குமான உடலமைப்பு வெவ்வேறு விதமானது. இந்த உடல் ரீதியான மாற்றங்களால் ஈர்க்கப்படும் ஆணும், பெண்ணும் ஒன்றாக சேர்கின்றனர்.

ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ உடல் ரீதியாக ஈர்க்கப்படுவதைக் காட்டிலும் மேலான உறவாக நட்பு உள்ளது. அந்த இருவருக்கும் இடையில் சில பெரிய அளவிலான விருப்பங்களில் ஒருமித்த கருத்துக்கள் இருந்தால், காதல் மலரத் துவங்கும். ஆண் மற்றும் பெண் இரண்டு பேரும் உடல் ரீதியாக ஈர்க்கப்பட்டும், அவர்களுக்கிடையில் பொதுவான விருப்பங்கள் இல்லாத போது அது காதலாக இருப்பதில்லை.


காதல் கொண்ட ஆணும், பெண்ணும் தங்களுடைய ஆன்மாவை உணர்வுப்பூர்வமாக ஒருமைப்படுத்த முயற்சி செய்வார்கள். ஆணும், பெண்ணும் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் பாலினத்தை சேர்ந்தவர்களாக இருப்பதால் இந்த பிணைப்பு மிகவும் பலமானதாக இருக்கும். இந்த உணர்வுப்பூர்மான இணைப்பு மிகவும் பலமானதாக இருப்பதால் தான் மனிதர்களிடம் காதல் வாழ்கிறது.

பாரம்பரியமாகவே காதலிக்கும் நபர்களில் ஆண் மூத்தவராகவும், பெண் இரண்டு அல்லது அதிகமான வயது குறைந்தவராகவோ இருப்பதாகவோ சொல்லப்பட்டு வந்தாலும், உண்மையான காதலுக்கு வயது இல்லை. உடல் மற்றும் நட்பு ரீதியில் இருவருக்கும் இடையில் பலமான உணர்வுப்பூர்வமான பிணைப்பு இருந்தால் போதும். உண்மையில், மூத்த பெண்கள், வயது குறைந்த ஆண்களுடன் காதல் வயப்பட்டது தொடர்பாக நிறைய விஷயங்கள் நிகழ்ந்துள்ளன.


பெரும்பாலும், உண்மையான காதலுக்கு ஏற்படும் கடைசி தடையாக திருமணம் கருதப்படுகிறது. ஒரு ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், அவர்களுடைய உணர்வுப்பூர்வமான பிணைப்பு பிரிக்க முடியாததாகி விடுகிறது என்று சொல்லப்படுகிறது. ஆனால், யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானலும் திருமணம் செய்து கொள்ளலாம். திருமணம் என்பது உண்மையான காதலின் அடையாளம் என்று சொல்லப்பட்டாலும், அதை முழுமையாக ஏற்றுக் கொள்வதற்கில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *