புலமைப்பரிசில் பரீட்சையில் வெயாங்கொடை ஆரம்ப பாடசாலையின் நெஹான்சி பிரபோத்யா குலரத்ன என்ற மாணவி 195 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.வயங்கொடை – உடுகம பிரதேசத்தில் வசிக்கும் நெஹான்சி குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை என்பதுடன் அவருக்கு ஒரு மூத்த சகோதரியும் உள்ளார்.

குறித்த மாணவி தனது வெற்றி குறித்து கருத்து தெரிவிக்கையில்,இந்த சாதனைக்கு எனது பாடசாலைக்கே முழு பெருமையும் சேர்க்க வேண்டும். பாடசாலை மற்றும் வகுப்புகளில் வழங்கும் பாடங்களை தினமும் செய்தேன். எனது பெற்றோர் மற்றும் எனது அதிபர் மற்றும் தலைமை ஆசிரியர் எனக்கு நிறைய உதவிகளை செய்தனர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
