One Day Passport எடுப்பதனுடைய தெளிவான விளக்கம்!நீங்கள் வசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விடயம்!!!NORMAL PASSPORT பெறுவதற்கும் ONE DAY PASSPORT பெறுவதற்கும் முதலில் அங்கு TOKEN எடுக்க வேண்டும். TOKEN ஏற்கனவே ஆன்லைன் இல் பதிந்து தேதி எடுத்தவர்களுக்கு தான் வழங்கப்படுகிறது. தவிர எல்லோரும் அங்கு சென்று வரிசை வரிசையாக முட்டிக்கொள்ள கூடாது என்பதற்கு மட்டுமே அந்த ஆன்லைன் பதிவு கொண்டு வரப்பட்டுள்ளது.

TOKEN எடுத்தால் உடனே இரண்டாவது மாடியில் D அடையாளம் இடப்பட்டுள்ள அறைக்குள் சென்று வரிசையில் நின்று ஆவணங்களை (PASSPORT விண்ணப்பம்,NIC போட்டோ பிரதி, பாஸ்போர்ட் போட்டோ பிரதி, பிறப்பு பதிவு மற்றும் ஆன்லைன் இல் போட்டோ SUBMIT செய்த ஆவணம் மற்றும் பழைய PASSPORT ) என்பவற்றை கொடுத்தால் உங்களையும் உங்கள் புகைப்படத்தையும் பார்த்து VERIFY செய்துவிட்டு மீண்டும் ஒரு ஆவணத்தில் கையொப்பம் பெறுவார்கள்.
கையொப்பம் ஒருக்காலும் மாறிவிட கூடாது, விண்ணப்பத்தில் உள்ளதை போன்று சரியாக இட வேண்டும்.
அதன்பின் FINGER PRINT பதிவு செய்ய பக்கத்து அறைக்கு போக சொல்வார்கள். அங்கும் ஒரு நீண்ட வரிசை நிற்கும். அதில் ஒரு அரை மணிநேரம் நின்று தான் FINGER செய்துவிட்டு அடுத்த அறைக்கு வந்து 20,000/- பணம் செலுத்தி துண்டு ஒன்றை தருவார்கள். இவையெல்லாம் உங்களுக்கு தரப்பட்டுள்ள TOKEN ஐ அடிப்படையாக கொண்டே நடக்கும்.
எனவே TOKEN ஐ தொலைத்தோ அல்லது கிழித்தோ விடாமல் பாதுகாப்பாக வைத்து கொண்டு கட்டணம் செலுத்தி பணம் பெறும் வரைக்கும் வைத்து கொண்டால் போதும். கட்டணம் செலுத்திய துண்டில் நீங்கள் எந்த COUNTER இல் PASSPORT ஐ பெற்றுக்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டிருக்கும்.

அங்கே சென்று நீங்கள் சுமார் 5 மணிநேரம் காத்திருக்க வேண்டும். பலரும் வெளியில் சென்றுவிட்டு தக்க நேரத்தில் வந்து பெற்றுக்கொள்ளலாம். தூர இடங்களில் இருந்து வருவோர் அங்கேயே இருக்கத்தான் வேண்டும்.ONE DAY SERVICE என்றாலும் முழுநாள் ஒதுக்கியே ஆக வேண்டும். பலர் அங்கு நாள் கணக்கில் அலைந்து திரிவதை காண முடிந்தது.
உண்ண பருக PASSPORT ISSUING பகுதியில் நல்ல CANTEEN ஒன்றும் உள்ளது. ஆரோக்கியமான உணவுகளையே பொறித்த விலைக்கு விற்கின்றனர். அது உண்மையில் ஆறுதலாக இருந்தது.TOKEN கிடைக்கப்பட்ட ஒழுங்கில் யாரும் விண்ணப்பம் கையளிப்பதில்லை. யார் TOKEN ஐ எடுத்துக்கொண்டு வரிசைக்கு சென்று விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பகுதிக்கு (2ND FLOOR- D பிரிவு) முதலில் நிற்கிறாரோ அதுவும் FINGER செய்துவிட்டு பணம் செலுத்தி ரெசிப்ட் எடுத்து கொள்கிறாரோ அதில் குறிக்கப்பட்டுள்ள நேரத்திலிருந்து தான் உங்களுடைய PASSPORT PROCESSING பணிகள் துவங்கும்.
எனவே அங்கு சென்று அங்குமிங்கும் அலைமோதி கொண்டு நேரத்தை வீணாக்கி கொள்ளாமல் எவ்வளவு நேரத்தோடு சென்று பணத்தை கட்டி ரெசிப்ட் எடுத்து கொள்ள முடியுமே அவ்வளவு நேரத்துடன் நீங்கள் பாஸ்போர்ட் உங்கள் கைக்கு கிடைக்கும்.

5 மணிநேரம் முடிவதற்கும் பாஸ்போர்ட் உங்கள் கைக்கு வரும் முன்னர் உங்கள் மொபைல்ற்கு மொத்தமாக நான்கு SMS கள் வரும் வரைக்கும் நீங்கள் காத்து நிற்க வேண்டும். இறுதி SMS வந்ததிலிருந்து 30 நிமிடம் கழித்து தான் PASSPORT ISSUING COUNTER ற்கு உங்கள் PASSPORT வந்ததும் ஒலிபெருக்கியில் ஒவ்வொரு பெயர்களாக அழைக்கும் போது நீங்கள் அவ்விடத்தில் இருக்க வேண்டும். இவையெல்லாம் நடந்து முடிய சுமார் குறைந்தது 6 மணிநேரம் தேவைப்படும்.
TOKEN வழங்கப்படுவது முதலாவது மாடியில் DOCUMENTS ACCEPT பண்ணுவது இரண்டாவது மாடியில்..FINGER PRINT இரண்டாவது மாடியில்..கட்டணம் செலுத்துவதும் இரண்டாவது மாடியில்..PASSPORT பெறுவதும் இரண்டாவது மாடியில்..
சிலர் முதலாவது மாடியில் உள்ள NORMAL SERVICE வழங்கும் பகுதியில் தேவையில்லாமல் விவரம் தெரியாமல் வரிசையில் காத்து கிடக்கின்றார்கள். மிகவும் அவதானத்துடன் செயல்பட்டு நேர விரயத்தை குறையுங்கள்.
நீங்கள் ONE DAY SERVICE இல் PASSPORT எடுக்க விரும்பினால் ONLINE இல் விண்ணப்பித்து உங்கள் போட்டோ ஒன்றை SUBMIT செய்வதன் மூலம் தேதி ஒன்று கிடைக்கும். அது இன்றிலிருந்து ஒரு மாதத்தின் பின்னருள்ள திகதிக்கு தான் சென்று எடுப்பதற்கு வரும்.

உங்களுக்கு அவசரமாக இரண்டு மூன்று தினங்களில் வேண்டுமென்றால் நீங்கள் ONLINE இல் பதிவு செய்யும் போதே அந்த திகதியை பெற்று கொள்ள 20,000/- செலுத்த வேண்டியிருக்கும். பின்னர் அங்கு சென்றும் PASSPORT க்கும் கூட 20,000/- செலுத்த வேண்டும்.
அவசரமாக PASSPORT தேவைப்படுபவர்கள் எம்மில் அதிகமானோர் உள்ளனர் என்பதால் தான் ONLINE திட்டமொன்றே கொண்டு வரப்பட்டுள்ளது. மற்றபடி அதில் குறிக்கப்பட்டுள்ள நேரம் என்பதெல்லாம் பொய் தான். அங்கு ONLINE இல் பதிந்து பெறப்பட்ட தேதியை மட்டுமே பார்க்கின்றனர். நீங்கள் தேதியை முன்கூட்டி பெறவே 20,000/- மேலதிகமாக செலுத்த வேண்டியிருக்கிறது.
நீண்ட நேரம் காத்து நின்று தான் எடுக்க வேண்டும் என்பது இன்னும் அடுத்த முப்பது வருடங்களில் தான் மாறும். மற்றபடி உங்களுக்கு கையிலே உடன் கிடைப்பது போன்ற சேவையை வழங்க அந்த பெரிய பிரம்மாண்ட கட்டடத்தில் ஆயிரம் ஊழியர்கள் இருப்பது போல தெரியவில்லை. அங்கு போனது உங்களுக்கு இந்த விடயங்கள் எல்லாமே புரியும்.

இறுதியாக ஒன்று நீங்கள் குறிக்கப்பட்ட நேரத்திற்கு செல்ல வேண்டாம். அன்றைய திகதியில் காலையிலேயே சென்று பணிகளை துவங்கினால் மாலையில் நேரத்துடன் கிடைத்துவிடும். இல்லாவிட்டால் இரவு முழுக்க அங்கு தரையில் தூசு தட்டிவிட்டு தூங்கவேண்டி இருக்கும்.அவசியம் மறக்காமல் மொபைல் சார்ஜ் செய்து கொண்டு செல்லுங்கள். நான்கு SMS களும் வருவதை அவதானிக்க வேண்டியிருக்கும். அது தவறினால் மிகவும் கஷ்டமாக போய்விடும். QaimaTv