தமிழில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22-01-2023) பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.இந்த நிகழ்ச்சியில் இறுதியில் அசீம், ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி இருந்த நிலையில் இதில் டைட்டில் வின்னராக அசீம் தேர்வாகினர்.

இதேவேளை, பிக்பாஸ் சீசன் 6 யில் முக்கிய போட்டியாளராக கலந்துகொண்டவர்தான் நகைச்சுவை நடிகர் அமுதவாணன்.இந்த நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பணப்பெட்டியில் இருந்த 11 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு அமுதவாணன் வெளியேறி ரசிகர்களுக்கும் சக போட்டியாளர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தார்.
இவ்வாறு இருக்கையில், முதல் முறையாக லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு அமுதவாணன் பதில் அளித்து இருக்கிறார். பிக்பாஸ் வீட்டில் அமுதவாணனும் ஜனனியையும் நட்பாக பழகுவதையும் பற்றி அமுதவாணன் பல இடங்களில் ஜனனி எனக்கு ஒரு சகோதரி மாதிரி தான் வேறு எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்தி இருந்தாலும் அவரைப் பற்றி பலர் பொதுவெளியில் குறிப்பாக யூடியூப் சேனல்களிலும் வீடியோக்களிலும் தவறாக சித்தரித்து வந்திருக்கின்றனர்.

அதுக்கு முதல் முறையாக அமுதவாணன் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.எது உண்மை என்று தெரியாமல் சிலர் தங்களுக்கு வியூஸ் வரவேண்டும் என்பதற்காக இப்படி எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் அடுத்தவர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை புரிந்து கொள்வதில்லை.ஆனாலும் எனக்கு ரசிகர்களும் நண்பர்களும் அதிகமானோர் ஆதரவு தந்து என்னை நம்புகின்றனர். அது எனக்கு போதும் என்று கூறி இருக்கிறார்.