கல்வியில் சாதனைகள் என்பது சாதாரணமாக நிகழ்த்தப்படுகின்றபோதிலும் விசேட தேவையுடைய மாணவர்களின் சாதனைகள் என்பது இக்காலக்கட்டத்தில் பல்வேறு தளங்களிலும் பதிவுசெய்யப்பட்டு வருகின்றது.

வெளியாகியுள்ள 5ஆம் தரம் புலமைப்பரிசில் பரீட்சையில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தின் விசேட தேவையுடைய மாணவன் குபேந்திரன் றினோபன் 160 புள்ளிகளைப் பெற்று பாடசாலையில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்ற மாணவன் என்ற சாதனையினை படைத்துள்ளார்.
செங்கலடியினை சேர்ந்த குபேந்திரன் – கஜேந்தினி தம்பதியினரின் சிரேஸ்ட புதல்வாரன றினோபன் பிறவியிலேயே இரண்டு கால்களும் நடக்கமுடியாத நிலையிலும் இரண்டு கைகளும் தொழிற்பாடு குறைந்த நிலையிலேயே இருந்து வந்துள்ளது.

இவ்வாறான நிலையில் குறித்த மாணவன் பாடசாலையில் கற்றல் நடவடிக்கைகளில் திறமையான மாணவனாகயிருந்துவந்த நிலையில் பாடசாலையில் கற்றல் நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்களும் மாணவர்களும் உதவி வந்துள்ளனர்.
புலமைப்பரிசில் பரீட்சையில் பாடசாலையில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமைசேர்த்துள்ள றினோபன் எதிர்காலத்தில் தான்ஒரு பொறியியலாளராக ஆகவேண்டும் என்பதே இலட்சியம் எனவும் தெரிவித்தார்.கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஊடல் ஊணம் என்பது தடையில்லையெனவும் முற்சிக்கும்போது வெற்றி என்பது நிச்சயம் எனவும் குறித்த மாணவன் தெரிவித்தார்.