விபத்தில் பெற்றோரினை இழந்த மாணவி..!! புலமைப்பரிசில் சாதனை.! குவியும் வாழ்த்துக்கள்.!!

செய்திகள்

கடந்த 2021 அம ஆண்டு பசறை விபத்தில் பலியான தம்பதியினரின் மகள் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பு சித்தி பெற்றுள்ள சம்பவம் நெகிழ்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. பசறை கல்வி வலயத்துக்குட்பட்ட லுணுகல ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி மாணவியான நோவா யூஜீனியா, புலமைப்பரிசில் பரீட்சையில் 174 புள்ளிகளைப்பெற்று, சித்தியடைந்துள்ளார்.


பதுளை மாவட்டத்தில், பசறை கல்வி வலயத்தில் இம்மாணவியே அதிக புள்ளிகளைப்பெற்றுள்ளார். பதுளை , பசறை 13 ஆம் கட்டை பகுதியில் 2021 மார்ச் 20 ஆம் திகதி இடம்பெற்ற பஸ் விபத்தில் 14 பேர் பலியாகினர்.இவ்விபத்தில்

அந்தோனி நோவா (வயது – 32) என்பவரும், அவரது மனைவியான பெனடிகக் மெடோனோ (வயது 31) உயிரிழந்தனர். அவர்களின் மகளே யூஜீனியா.பெற்றோர் உயிரிழக்கும்போது இவர் தரம் மூன்றில் கல்வி பயின்றுக்கொண்டிருந்தார். இந்நிலையில் குறித்த மாணவி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பு சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *