WhatsAppல் ஸ்டேட்டஸ் போடுபவர்களை பற்றிய ஓர் சிறந்த பதிவு ஒன்று..! அவசியம் படியுங்கள்.!

செய்திகள்

வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் போடுவது என்பது ஒரு சிறந்த செயலாக நான் கருதவில்லை.வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இன்னைக்கு நிறைய பேர் மத்தவங்களை இம்ப்ரஸ் பண்ண தான் போடுறாங்க…(நல்லவிதமா யூஸ் பண்ற உங்களுக்கு இதை நான் சொல்லல…)


மத்தவங்கள இம்பிரஸ் பண்ண செய்யக்கூடிய ஒவ்வொரு செயலும் நம்மளுக்கு தோல்வியை தான் தரும்.முதல்ல நாம நம்மளை இம்ப்ரஸ் பண்ண கத்துக்கணும்…நம்மள யாரும் கவனிக்காத நிலைமையில் நாம் என்ன செய்கின்றோம் அதுதான் நம்முடைய சாதனை….

இப்ப நான் நான் என்னோட பிரெண்ட்ஸ் நிறைய பேரை பார்த்து இருக்கேன்.. அவனுங்க ஒரு ஸ்டேட்டஸ் போடுவானுங்க வாட்ஸப்ல…போட்டு ஐந்து நிமிடம் கூட இருக்காது.. இந்த ஸ்டேட்டஸ் யார் யார் பார்த்து இருக்காங்க, யார் யார் பார்க்கல, பார்க்கவில்லை என்றால் நீங்க ஏன் பார்க்கல ஆன்லைன்ல தான் இருந்தாங்க ஏன் பார்க்கவில்லை…

இப்படி யோசித்து மன வியாதிக்கு ஆளாக கூடிய ஆட்கள் இருக்காங்க.சில பேர் இருக்காங்க சோகமா இருந்தா அம்மா ஸ்டேட்டஸ் அப்பா ஸ்டேட்டஸ் பாடல்கள் போடுவாங்க…ஆனா அவங்க அம்மாவுக்கும் அவங்க அப்பாவுக்கு போன் பண்ணி பேச மாட்டாங்க…அந்த ஸ்டேட்டஸ் பாடலை அவங்க அம்மாவும் அப்பாவும் பார்த்து இருக்க மாட்டாங்க..


அப்ப இதெல்லாம் யாருக்கு பண்றானுங்க..நீ ஒரு பாடலை தேடி அதை டவுன்லோட் பண்ணி வாட்ஸ் அப்ல ஒரு ஸ்டேட்டஸ் வைக்கிறது கிட்டத்தட்ட ஒரு பத்து நிமிடம் வைத்துக் கொள்ளுங்களேன்…அந்தப் பத்து நிமிஷத்துல அவ கிட்ட போன் பண்ணி நீங்க பேசி விடலாமே.. அவளுக்கு நிறைய திருப்தி வருமே.

நாங்க ரொம்ப சந்தோஷமா இருக்கும் அப்படின்னு காட்டுவதற்கு தான் இந்த டிக் டோக் வீடியோ, ஸ்டேட்டஸ் வீடியோஸ் எல்லாம்..உண்மையிலேயே இந்த வீடியோஸ் போறவங்க எல்லாம் சந்தோசமா இருக்க மாட்டாங்க…இந்த வேண்டாத விளம்பரம் எதுக்கு, உண்மையிலேயே நம்ம சந்தோஷமா இருக்க நம்ம செய்ய வேண்டிய செயல் நிறைய இருக்கு அதை பண்ணினாலே போதுமே இதெல்லாம் ஒரு டைம் வேஸ்ட் தானே…

எங்க வீட்டு பக்கத்துல ஒரு காதல் ஜோடி இருக்காங்க அவங்களுக்கு திருமணமாகிவிட்டது…அவங்க பேச வேண்டியது முகம்பார்த்து நேரா பேசிக்கலாம். தப்பு இல்ல ஏனென்றால், அவர்களுக்கு திருமணம் ஆயிடுச்சு கணவன், மனைவி தப்பில்லை.


ஆனா இவங்க என்ன பண்ணுவாங்க அப்படின்னு தெரியுமா…”உனக்காக பொறந்தேனே எனதழகா”.. பாட்டு போடறாங்களாம் அவங்க கணவருக்கு…ஆனால் உண்மையில் என்ன ரெண்டு பேரும் பேசிக் கொள்வது கிடையாது…

அப்புறம் எப்படி சந்தோசம் வரும் தாம்பத்தியம் சிறக்கும்….காதல் பண்ற ஜோடிகள் வாட்ஸ்அப் இல்ல சிங்கிள் பசங்க அப்படின்னு ஸ்டேட்டஸ் போறாங்க,கல்யாணம் ஆகாத பசங்க நிறைய பேரு ஏதோ உண்மையிலேயே அந்தப் பொண்ணஅஞ்சு ஆறு வருஷம் சின்சியரா லவ் பண்ணின மாதிரி…காதல் பாட்டா போடுவாங்க…இதுதான் எதுக்குடா பண்றீங்க…

இன்னொரு டைப் இருக்குதுல்ல, மோட்டிவேஷன் (சுயமுன்னேற்றம்).யாராச்சும் திட்டிட்டாங்க நா, இல்ல ஏதோ ஒரு செயல் செய்யும் பொழுது தப்பா ஆகிடுச்சு…உடனே வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ல நல்ல மோட்டிவேஷன் சாங் “திரும்பி வா உன் திசை எது தெரிந்தது மாறிப் போகாதே”

அப்படின்னு ஒரு சாங் போடுவானுங்க…மோட்டிவேஷன் சாங் போட்டா உன் பிரச்சினை தீருமா…களத்துல இறங்கி நீ செயல் படனும்…அப்பதான் வெற்றி கிடைக்கும்.. போராட வேண்டும் சும்மாவெற்றி கிடைக்காது…பைனல் நான் என்ன சொல்ல வர்றேன்னா, இந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோஸ் எல்லாம் சுத்த வேஸ்ட் இந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோஸ் போறவங்க எல்லாம் உண்மையிலேயே சந்தோஷமாக உள்ளவர்கள் கிடையாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *