கொழும்பு கண்டி வீதியினை பயன்படுத்தும் சாரதிக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு.!!

செய்திகள்

கொழும்பு- கண்டி பிரதான வீதியில் வரகாபொல மற்றும் அம்பேபுஸ்ஸ ஆகிய பகுதிகளுக்கு இடையிலான வாகன போக்குவரத்து இன்று முதல் ஒரு வார காலத்திற்கு ஒரு பாதையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இன்று காலை முதல் பெப்ரவரி முதலாம்


திகதி வரை குறித்த பகுதியில் காபட் இடப்படவுள்ள பணிகள் காரணத்தினால் இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.அதன்படி கொழும்பு மற்றும் கண்டி நோக்கி செல்லும் வாகன சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.அதற்கமைய,

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் மாவனெல்ல – ரம்புக்கனை வீதியின் குருணாகல் வரை பயணித்து, மீரிகம ஊடாக பஸ்யால சந்திக்கு பிரவேசித்து அல்லது கேகாலை வரை பயணித்து பொல்கஹவெல,


அலவ்வ, மீரிகம, பஸ்யால ஊடாக பஸ்யால சந்திக்கு பிரவேசித்து கொழும்பு நோக்கி பயணிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணிக்கும் போது, பஸ்யால சந்தியிலிருந்து மீரிகம ஊடாக குருணாகல் வழியாக கண்டி நோய்யி பயணிக்க முடியுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *