இலங்கைக்கு செல்ல முடியாத அளவிற்கு தமிழ்நாட்டில் பிக்பாஸ் ஜனனிக்கு அடிக்கும் அதிஷ்டங்கள்! குவியும் வாழ்த்துக்கள்.!!

சினிமா

தமிழில் பிரபலமான தொலைக்காட்சியில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனின் கிராண்ட் ஃபினாலே கடந்த ஞாயிற்றுக்கிழமை (23-01-2023) நடந்து முடிந்துள்ளது.மேலும் இந்த பிரபலமான நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.


இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6 யின் 21 போட்டியாளர்களில் ஒருவராக இலங்கையில் மாடலிங் பண்ணிக் கொண்டிருந்த ஜனனி பங்குபெற்றார். பிக்பாஸ் வீட்டில் அனைத்து டாஸ்க்குகளில் சிறப்பாக விளையாடி வந்த போதிலும் குறைந்த வாக்குகள் அடிப்படையில் ஜனனி வெளியேற்றப்பட்டார். இந்த போதிலும் அவருக்கு பல ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6 ஃபினாலேவில் விக்ரமன் & அசீம் இருவரில் அசீமின் வெற்றியை அறிவிப்பதற்கு முன்பாக, கையை மாற்றி மாற்றி ஆட்டி விளையாட்டு காட்டிய கமல் இறுதியாக அசீம் வெற்றி பெறுவதாக அறிவித்தார்.


இதையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலேவில் ஜனனியிடம் பேசிய கமல் வெளியில் எப்படி வரவேற்பு இருக்கிறது? நாட்டுக்கு திரும்புனீர்களா என கேட்டார். அதற்கு ஜனனியோ, “வெளியில் பலரும் நல்ல வரவேற்பை தருகின்றனர்.

இல்லை, இன்னும் நாட்டுக்கு திரும்பவில்லை.” என சொல்ல, “அப்படி.. நாட்டுக்கு திரும்ப முடியாத அளவுக்கு தமிழ்நாட்டில் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது இல்லையா..?” என பாராட்டினார். ஜனனியும் அதனை அங்கீகரித்து மகிழ்ச்சியுடன் புன்னகைத்தார்.


மேலும் லேகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 67 படத்தில் முக்கிய காதப்பாத்திரத்தில் ஜனனி நடிப்பதாகவும் சமீபத்தில் செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருவதும் குறிப்படத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *