பாரிய எதிர்ப்பினால் மூடப்பட்டுள்ள பிரபல உணவு விற்பனை நிறுவனம்..!! யாழில் சம்பவம்.!

செய்திகள்

யாழ்.கோண்டாவில் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பன்னாட்டு உணவு விற்பனை நிறுவனம் ஒன்றின் கிளையை தற்காலிகமாக மூடுமாறு நல்லூர் பிரதேசசபை பணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த அசைவ உணவகத்திற்கு


முன்பாக சைவ ஆலயங்கள் காணப்படுகின்றன. இதன் காரணமக குறித்த ஆலய நிர்வாகம் மற்றும் சைவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துவந்தன.அதேபோல் குறித்த வியாபார நிலையம் அமைந்துள்ள கட்டிடத்திற்கு அமைவுச் சான்றிதழ் மற்றும் வியாபார அனுமதி பத்திரம் என்பன பெறப்படவில்லை என்றும்

கூறப்படுகின்றது.இந்த விடயம் கடந்த 17ம் திகதி நடைபெற்ற சபை அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டது. அதற்கமைய குறித்த உணவு விற்பனை நிலையத்தை தற்காலிகமாக மூடுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, நல்லூர் பிரதேசசபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *