சற்று முன்னர் யாழில் நடந்த கோர விபத்து.!! ஒருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்.!!

செய்திகள்

யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் சற்று முன்னர் இ.போ.ச சொந்தமான பேருந்து மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் மோட்டார்க் சைக்கிளில் சென்றவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இச்சம்பவம் தொடர்பில் மேலும், தெரியவருவதாவது,பருத்தித்துறை கட்டைக்காடு சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை பருத்தித்துறை சாலை பேருந்து உடுத்துறை வேம்படி பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் விபத்தில் படுகாயமைந்துள்ள நிலையில், அருகிலுள்ள மக்களால் உடனடியாக அவரை மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.விபத்து தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகிறார்.சம்பவ இடத்திற்கு வந்த மருதங்கேணி போக்குவரத்து பொலிசார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *