பேருந்தில் வீடு செல்வதற்கு மூன்று மணிவரை பஸ் தரிப்பிடத்தில் கடுகடுக்க காத்திருந்த பாடசாலை மாணவர்கள்..!! யாழில் சம்பவம்.!

செய்திகள்

முல்லைத்தீவு மாங்குளம் ஊடாக யாழ்ப்பாணம் வந்த பேருந்து மாங்குள சந்திக்கு அண்மித்த பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்த பிள்ளைகளால் மறிக்கப்படவே பஸ் தரித்து நின்று 30க்கு மேற்பட்ட மாணவர்கள் எல்லோரையும் ஏற்றியது.


பஸ் நிறைந்து Footboard இல் சில மாணவர்கள் நிற்க வேண்டி வரவே பின் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த நானும் இன்னொருவரும் மாணவர்களை சிறிதாக அதட்டி உள்ள ஏறுங்கட Bag குகள கழட்டிக் கொண்டு உள்ள போங்கோ உள்ள போங்க என்டு அறிவுத்தவே ஒரு 11 அல்லது 12 வயது மதிக்கத்தக்க மாணவன் ஒருவன் என் கால்களுக்கு அருகில் தரித்து நின்டான்.

அவனிடம் சின்னதாக கதையை குடுத்தேன்.எங்கடாபா எல்லாரும் ஒன்னா போறீங்க என்டு…வீட்ட போறம் அண்ணை என்டுறது அவர்ட பதில்.Ahh பள்ளிக்கூடம் முடிச்சு வீட்ட போறன்டா ஏன்டாலேற்… school la எதும் புறோக்கிறாம் நடந்ததோ என்டு கேட்க


எங்கள ஒரு பஸ்சும் ஏத்தேல அதான் இவ்வள நேரம் போச்சு என்டு பசி தோய்ந்த முகத்தோட அந்த குழந்தை சொன்ன பதிலில நான் கண்ட வேதனை உண்மையில கடந்து போன பேருந்து சாரதிகளுக்கான வாழ்நாள் சாபமே.

ஏன்டா ஏத்தாம போனவங்க என்ட “நாங்கள் சீசன்டிக்கெற்றண்ணை”அதான் ஏத்தேல.Hahaha இப்பெல்லாம் பணம் தான் எல்லாத்தையும் தீர்மானிக்குது.1:35 ல இருந்து3:00 மணி தட்ட அந்த குழந்தைகளை தாண்டிச் சென்ற ஒவ்வொரு பேருந்துகளின் சாரதிகளுக்காகவும் இறைவனை பிரார்த்தித்துக் கொள்ளுறன்.உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் இந்த நிலைமை வந்திடக்கூடாது என்டு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *