வளிமண்டல சுழற்சி காரணமாக எதிர்வரும் 23.01.2023 முதல் 27.01.2023 வரையான காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா இதனை எதிர்வுகூறியுள்ளார்.இந்நிலையில் இடைப்பட்ட காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு மாலை அல்லது இரவு அல்லது அதிகாலையில் சிறிய அளவில் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

23.01.2023 தொடக்கம் 27.01.2023 வரையான காலப்பகுதியில் நெல் அறுவடைச் செயற்பாடுகளில் ஈடுபடும் விவசாயிகள் மழையை எதிர்கொள்வதற்கான போதுமான ஏற்பாடுகளோடு அறுவடையை மேற்கொள்வது சிறந்தது என அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
