நாட்டுக்கு நாடு சட்டம் மாறுகிறது. Reasonable force “நியாயமான சக்தி-ஐ” கையாளலாம் என்பது பொதுவான நம்மை போன்ற common law நாட்டிற்கு சட்டம்.நீங்கள் எதிர்கொண்ட அபாயத்தை தாங்கள் உண்மையென நம்பிய சூழலின் பின்னணியை மதிப்பிடப்பட வேண்டும் என்று சட்டம் கூறிகிறது – நீங்கள் உண்மையில் எதிர்கொண்ட ஆபத்து சட்டத்திற்கு முக்கியமல்ல. .

அதாவது , உங்கள் பயத்தின் காரணம் பின்னர் தவறு என நிரூபிக்கப்பட்டாலும்கூட , நீங்கள் எதிர்கொண்டதாக நீங்கள் நினைத்த அபாயத்தின் அடிப்படையில் react செய்ய உங்களுக்கு உரிமை உண்டு – உங்கள் செயல்கள் உண்மையான நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்திருந்தால்.
எனவே, எடுத்துக்காட்டாக, நீங்கள் துப்பாக்கி போன்ற ஆயுதம் ஏந்தி ஊடுருவிய ஒரு நபரை எதிர்கொள்கிறீர்கள் என்ற நம்பிக்கையின் பேரில் நீங்கள் செயல்பட்டால், தங்கள் ஆயுதம் உண்மையில் ஒரு யதார்த்தமான தோற்றமுடைய பொம்மைதுப்பாக்கி என்றால், நீங்கள் “நியாயமான சக்தி-ஐ” (reasonable force) உபயோகப்படுத்தினீர் என சட்டம் கொள்ளும்.

ஒருவேளை , உதாரணத்துக்கு நீங்கள் போதையில் இருக்கும் போது ஒரு ஆபத்தை எதிர்கொள்கிறீர்கள் என கொள்வோம் . அப்போது அந்த திருடனை ஒரு தடியால் தலையில் சாதாரணமாக (light-ஆ )அடித்து அதனால் அவர் மடிந்தால் நீங்கள் உபயோகித்தது reasonable force ஆகாது.இது பற்றிய மேலதிக தகவல்கள் தெரிந்தாலோ இல்லையென்றால் அறிந்தாலோ எமக்கும் தெரியப்படுத்துங்கள்.