திருமணமான பெண்கள் தாய் வீட்டில் இருந்து இந்த பொருட்களை எடுத்து செல்ல கூடாதாம்..!! அவசியம் படியுங்கள்.!

செய்திகள்

திருமணமான பின்பு பெண்கள் புகுந்த வீட்டிலிருந்து தாய் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது உண்டு. அப்படி வந்து செல்லும் பொழுது அம்மா வீடு தானே என்று நிறைய பொருட்களை இங்கிருந்து கொண்டு செல்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.


புகுந்த வீட்டிலிருந்து பிறந்த வீட்டிற்கு வந்த பின்பு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் கிளம்பக் கூடாது என்று கூறுவது வழக்கம்.இந்த நாட்களில் வீட்டிற்கு வந்த மகள் வீட்டை விட்டு சென்றால் வீட்டில் இருக்கும் மகாலட்சுமியும் கூடவே சேர்ந்து போய்விடுவாள் என்று கூறப்படுகிறது.அதே போல எட்டாம் நாள் மாதத்தின் கடைசி நாள் அஷ்டமி, நவமி போன்ற நாட்களிலும் அனுப்ப மாட்டார்கள்.

இந்த நாட்கள் எல்லாம் அசுப நாட்களாக கருதப்படுவதால் வீட்டிற்கு வந்த மகளை வெளியில் அனுப்புவதை தவிர்க்கின்றனர்.நல்ல நாள் பார்த்து நேரம் பார்த்து தான் புகுந்த வீட்டிற்கு மறுபடியும் அனுப்பி வைப்பார்கள். இப்படி ஒரு அற்புதமான சம்பிரதாயம் தமிழ்நாட்டில் அதிகம் உண்டு.


அது போல அம்மா வீட்டில் இருந்து பெண்கள் ஈர துணிகளை உலர வைக்காமல் எடுத்துக் கொண்டு செல்லக்கூடாது.இதனால் எம பயத்தை உண்டு பண்ணும், விபத்து நேரும், கெட்ட காரியங்கள் நடக்கும் என்று கூறப்படுகிறது எனவே துவைத்த துணியை காய போட நேரமில்லை என்று அள்ளிக் கொண்டு செல்லாதீர்கள். இன்னொரு நாள் வரும் பொழுது எடுத்துக் கொண்டு போகலாம்.

அம்மா வீட்டில் இருந்து கிளம்ப போகிறோம் என்றால் அன்றைய நாளில் பெண்கள் தலைக்கு எண்ணெய் வைத்து குளிக்கவே கூடாது.அந்த சமயத்தில் பெண்கள் புகுந்த வீட்டிற்கு கிளம்பக் கூடாது என்கிற ஐதீகமும் உண்டு. எனவே முன்கூட்டியே தலைக்கு குளிப்பதனால் குளித்து முடித்துக் கொள்ளுங்கள்.


எண்ணெய் வைத்து அன்றைய தினம் குளிக்காதீர்கள்.அதே போல எண்ணெய், சீயக்காய் மற்றும் துடைப்பம் ஆகியவற்றை தாய்மார்கள் பெண்களுக்கு கொடுத்து அனுப்பக்கூடாது.அதை அவர்கள் வாங்கி செல்லவும் கூடாது. எண்ணெய், சீயக்காய், துடைப்பம் போன்றவை இறப்பு வீடுகளில் அதிகம் பயன்படுத்தும் பொருட்களாக இருக்கிறது எனவே இவற்றை துரதிர்ஷ்டமாக கருதி புறக்கணிப்பது உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *