பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்களில் வரும் பிரச்சனைகள்..!!

செய்திகள்

இந்திய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பின்பற்றும் எவரும் இந்த மிகக்கொடிய சோதனைகளை கடந்து ஒருதடவையேனும் வந்திருக்க கூடும். திருமணத்திற்கு பெண்/மாப்பிள்ளை தேடுவது நிலவிற்கு சந்திராயன் அனுப்புவது போன்ற பெரிய நடைமுறை இருக்கின்றது. நம் முன்னோர்கள் நிச்சயிக்கப்படும் திருமணங்களுக்கு ஏன் இவ்வளவு சிக்கல்களை ஏன் விட்டு சென்றார்கள்?


பெருவாரியான இந்திய குடும்பங்களில் காதல் திருமணங்கள் பல்வேறு காரணங்களால் ஏற்று கொள்ள படுவதில்லை. ஆனால் அவர்கள் குடும்பத்திற்கு பெண் /மாப்பிள்ளை தேடும் படலம் தொடங்கியவுடன் கண்டிப்பாக இதற்கு அவர்கள் வருந்துவார்கள். அப்படி என்ன என்ன பிரச்சனைகள் உள்ளது என்று பார்ப்போம்

சாதி பிரச்சனை காதல் திருமணங்களில் மட்டும் இல்லை பெற்றோர்கள் ஏற்பாடு செய்யும் திருமணங்களிலும் பெரிய தடையாகவே உள்ளது. அவரவர் சாதி சொந்தங்கள் எங்கு உள்ளன, அவர்களிடம் வரன் உள்ளதா என்று தேடுவது. இதில் இன்னொரு பெரிய சோதனை அவரவர் subcaste மட்டுமே வரன் பார்ப்பார்கள். அப்படி பார்க்கும் போது அவர்களின் option கள் குறைந்து கொண்டே வரும். அவர்கள் subcaste ல் அவரவர்களுக்கு ஏற்ற வயது அமைவது வேறு கடினம்.

அப்படி ஒரு வேலை subcaste, வயது ஒத்துப்போகும் வரன் அமைந்துவிட்டாலும், வரனின் படிப்பு, தொழில், சம்பள எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடைய வேண்டும். இதில் பெரும்பாலான மாப்பிளை தேடும் பெற்றோர்கள் அரசு வேலையில் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வேற. (இதற்காக எல்லாருக்குமா அரசு வேலை கொடுக்க முடியும்?? ) என்னோட நண்பர் ஒருதெரெல்லாம் மத்திய அரசு வேளையில் இருந்தும் அவர் வடஇந்தியாவில் posting இருப்பதால் நெறய பேர் நிராகரித்துக்கொண்டே இருந்தார்கள்.


அடுத்து வரனின் பெற்றோர், வீடு ஆகிவற்றை பார்ப்பார்கள்.சொந்த வீடு, நிலம், சொத்து எவளோ தேறும் என்று பார்க்கிறார்கள். இதிலும் நாம் தேர்ச்சி பெற வேண்டும்.அடுத்து தான் பெரிய கண்டம் இருக்கு , ஜாதகம் என்னும் பெரும் தடையை தாண்ட வேண்டும். இரண்டு வரண்களின் ஜாதகமும் பொருத்தமாக இருக்க வேண்டும். 10

பொருத்தத்தில் எத்தனை பொருத்தம் இருக்கு, ஏதாவது தோஷம் இருந்தால் அதே தோஷம் இருக்கும் வரனாக அமைய வேண்டும். ஒருவேளை திருமணம் நடந்தால் அது அவர்கள் வாழக்கையை எப்படி மாற்றி அமைக்கும் வரை சொல்வார்கள் நம் ஜோசியக்காரர்கள்.


அடுத்து தான் இரு வீட்டாருக்கும் முக்கயமான தருணம். business deal (dowry) தங்கம், பணம், கார் /பைக் போன்ற deal களை பேசி அதில் திருப்தி ஏற்பட வேண்டும். இல்லையென்றால் அப்போதே திருமணத்தை நிறுத்தி விடுவார்கள். ரொம்ப ரோஷகாரர்கள் இரண்டு வீட்டாரும். அப்படி நின்று விட்டால் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

இந்த தடையெல்லாம் தாண்டி சேரும் ஜோடிகள் கல்யாணம் ஆன இரண்டாவது நாள் வாட்சபில் ” feeling blessed with my love of life” என்று ஸ்டேட்டஸ் போட்டால் எவளோ காண்டு ஆகும்.இந்த கஷ்டத்ததெல்லாம் பட்டுடும் நம் மக்கள் திருந்தாமல் இன்னும் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொண்டு இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *