கண்ணாடியை இப்படி வைப்பதனால் பணம் இரட்டிப்பாகுமாம்..!!வாங்க பார்ப்போம்.!

செய்திகள்

சம்பாதிக்கும் திறமை இருந்தாலும் அதை இரட்டிப்பாக மாற்றுவதும் மென்மேலும் பெருக செய்வதும் ஒரு சாதுரியம் தான்.கையில் 10,000 ரூபாய் இருந்தால் அதை 20,000 ரூபாயாக மாற்றி காட்டும் வல்லமை ஒரு சிலருக்கே இருக்கும். பணம் பெருக சாமர்த்தியமும், சாதுரியமும் மட்டும் இருந்தால் போதாது வீட்டின் வாஸ்துவும் சரியாக இருக்க வேண்டுமாம்.


வீட்டில் யாராவது ஒருவர் கண்டிப்பாக பணம் சம்பாதித்துக் கொண்டிருப்பார்கள். சம்பாதிக்கும் பணத்தை வீட்டில் கொண்டு வந்து வைக்கும் பொழுதும் அதை செலவு செய்யும் பொழுதும் யாருடைய கைகளில் அதிகம் இருக்கிறதோ அவர்களும் சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் அப்பொழுது தான் சம்பாதிக்கின்ற பணமானது இரட்டிப்பாகும்.

வீட்டில் குபேரன் வசிக்கும் இடம் வடக்கு, வடகிழக்கு ஆகும். இந்த வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் எப்பொழுதும் குப்பைகளை சேர விடக்கூடாது.அந்த இடத்தில் கனமான பொருட்களை வைக்கவும் கூடாது. பணம் வைக்கும் பீரோ, லாக்கர் போன்றவற்றை வைக்கும் பொழுது குபேர சம்பத்து அதிகரிக்கும் என்பது வாஸ்து சாஸ்திரம் ஆகும்.


கண்ணாடிக்கு பணத்தை பெருக்கும் தன்மை உண்டு. ஒரு இடத்தை கண்ணாடியில் பிரதிபலிக்க செய்தால் அந்த இடத்தில் இருக்கும் பொருளானது மென்மேலும் பெருகும் என்கிற ஒரு நம்பிக்கை உண்டு.அந்த வகையில் பணத்திற்கு எதிரே கண்ணாடியை வைக்கும் பொழுது பணம் ஆனது மென்மேலும் பெருகுவதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது.

பணம் வைப்பதற்கு ஒரு லாக்கர் வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளவும். இந்த லாக்கர் வடக்கு அல்லது வடக்கிழக்கு திசையை நோக்கி அமைந்திருக்க வேண்டும்.லாக்கர் அமைந்திருக்கும் இடத்திற்கு நேர் எதிரே ஒரு பெரிய கண்ணாடி ஒன்றை மாட்டி வைத்தால் கண்ணாடியில் பணத்தை எடுக்கும் பொழுது பணம் ஆனது பிரதிபலிக்கும்.


இப்படி கண்ணாடியில் பணம் பிரதிபலிக்க நேர்ந்தால் பணம் பல மடங்கு பெருகுவதாக வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகிறது. எனவே பணம் வைக்கும் இடத்திலிருந்து நேர் எதிரே கண்ணாடியை வைத்து பாருங்கள், இது நல்ல ஒரு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும்.

ஆள் உயர கண்ணாடியை நாம் வசிக்கும் இல்லங்களில் பயன்படுத்தக் கூடாது. ஆடம்பரத்திற்காக இத்தகைய பெரிய கண்ணாடிகளை வைப்பது கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகளை ஏற்படுத்தும்.குறிப்பாக படுக்கை அறையில் பெரிய கண்ணாடிகளை வைக்காதீர்கள்.அது போல வீட்டில் எப்பொழுதும் இந்த சத்தம் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

அதாவது தண்ணீரின் சத்தம். குழாய்களில் தண்ணீர் கசிவது அல்லது தண்ணீரை விரயம் செய்வது போன்றவற்றை செய்யும் பொழுது பணம் ஆனது கணக்கில்லாமல் செலவழிந்து கொண்டே செல்லும்.

அதே போல வீட்டில் நீரூற்றுகள் வைத்து அதிலிருந்து உருவாகக்கூடிய சத்தம் அல்லது மீன் தொட்டிகள் வைத்து அதிலிருந்து உருவாகக்கூடிய தண்ணீர் விரயம் இல்லாத சத்தத்தை எழுப்பினால் பணமானது பெருகுமாம் செல்வங்கள் அதிகரிக்க செய்யுமாம் என்று கூறப்படுகிறது.தண்ணீர் விரயமாகக் கூடாது, செலவாக கூடாது ஆனால் தண்ணீரின் சத்தம் வீட்டில் கேட்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *