நாகதோஷம் இருந்தால், அவரை திருமணம் செய்து கொள்ளும் முன் உங்களுக்கு அந்த பெண் ஜாதகம் பொருந்தி இருந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும் பரிகாரம் செய்யத பிறகு.நாகதோஷம் தீவிரமாக இருந்தால், மணமகன் இறப்பது உறுதி.

நான் இந்த மாதிரி நாகதோஷம் இருந்து திருமணம் செய்து இறந்தவர்களை பற்றி நிறைய கேள்வி பட்டு இருக்கிறேன். ஜாதகமே பார்க்க வில்லை என்றால் அது வேறு பிரச்சினை இல்லை.நல்ல ஜோதிடரை பார்க்கவும். இல்லை எதைப் பற்றியும் கவலை இல்லை என்றால், தைரியமாக திருமணம் செய்து கொண்டு விளைவுகளை சந்திக்க தயாராக இருங்கள்.
தோஷம் இருக்கும் ஜாதகத்திற்கு, தோஷம் இல்லாத ஜாதகத்தை சேர்க்க கூடாது என்பது தான் பொதுவிதி. இதை நான் ஜோதிடர் என்ற முறையில் சொல்கிறேன்.நல்ல ஜோதிடரிடம் அந்த பெண்ணின் ஜாதகத்தை இன்னும் ஒரு முறை கொடுத்து, அந்த பெண்ணின் ஜாதகம் சரியாக கணிக்கப்பட்டு இருக்கிறதா என்று பார்க்கவும்.

ஒரு ஜாதகம் சரியாக கணிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை ஒரு நல்ல ஜோதிடரால் கண்டுபிடிக்க கட்டாயம் முடியும். அதன் பிறகு உங்கள் குலதெய்வம் கோயில் பூ பொட்டலம் போட்டு பார்த்து விட்டு, கடவுளிடம் சம்மதம் வந்தால், திருமணம் செய்து கொள்ளவும்.
அவசரம் வேண்டாம் இது வாழ்க்கை பிரச்சினை. எல்லா காலத்திலும் எல்லாம் இருக்கிறது. நாகதோஷம் மிகவும் கெட்டது. எனவே நீங்கள் சிந்தித்து செயல்படுங்கள்.இந்த கேள்விக்கு முதலில் பதில் சொல்ல வேண்டாம் என்று முதலில் நினைத்தேன். இருந்தாலும் பொது வெளியில் இந்த கேள்வி கேட்கப் பட்டு இருப்பதால் மனது கேட்காமல் இதை பதிவு செய்கிறேன். இதுதான் எனது தனிப்பட்ட கருத்து ஆகும்.
