இந்த ஒரு காரணத்தினால் தானாம் இன்றைய காலத்தில் திருமணத்திற்கு பெண் கிடைப்பது கடினமாம்..!!

செய்திகள்

பெண்கள் இப்போது, இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன் ஆண்கள் இருந்த மனநிலையில் இருக்கிறார்கள்.. உசிலம்பட்டி பெண்குட்டிகளை , கருவிலே கொன்ற பாவம், ஒட்டு மொத்த சமுதாயத்தையுமே பிடித்து ஆட்டுகிறது ஆண், பெண் விகிதாசார நிலையே, இதற்கு முதல் காரணமாக சொல்லலாம்.


எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் நடந்தது இது. பையன் எம்.டெக் படித்து, நல்ல வேலையில் இருக்கிறான்.. நன்றாகவும் இருப்பான்.மாதம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குகிறான். வீட்டில் ஒரே பையன். சென்னையில் இரண்டு வீடுகள் இருக்கிறது. வசதிக்கு குறைவு இல்லை. பெற்றவர்களும் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்று

ஓய்வூதியம் பெறுகிறார்கள். இவ்வளவு இருந்தும் 31 வயது வரை அவனுக்கு திருமணம் கூடி வரவில்லை. கேட்டால் 2 ல் சனி பகவான் உட்கார்ந்து இருக்கிறாராம். அவரு எங்கியோ, வானில் சுழன்று கொண்டு இருக்கிறார். இந்த மனித பிறவிகள் தான், அவரை வம்புக்கு இழுத்து, அவர் பெயரை கெடுத்து கொண்டு இருக்கிறார்கள்.


சில நாட்களுக்கு முன், ஒரு பெண்ணின் ஜாதகம் பொருந்தி , பெண் பார்க்க போய் இருக்கிறார்கள். சுமாரான இடம் தான். பெண் பி.காம் தான் படித்து விட்டு, வீட்டில் இருக்கிறாள். வேலைக்கு எங்கும் போகவில்லை யாம்.!
இவர்களும் சரி வேலைக்கு போகாவிட்டாலும் பரவாயில்லை! என்று பெண்ணிடம் தனியாக, பேச போய் இருக்கிறான், அந்த பெண் போட்ட கண்டிஷன்கள்.

எனக்கு. வேலைக்கு போக விருப்பம் இல்லை. என்னை வற்புறுத்த கூடாது.சமைக்க தெரியாது. உங்கள் அம்மா தான் சமைக்க வேண்டும். இல்லை எனில் சமையல் செய்ய ஆள் வைக்க வேண்டும்.பாத்திரம் கழுவ மாட்டேன். வீட்டு வேலை எதுவும் செய்ய மாட்டேன்.

குழந்தை பெற்று கொள்ள எனக்கு விருப்பம் இருந்தால் பெற்று கொள்வேன். இல்லை என்றால், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்ளத்தான் வேண்டும். இதில் ஒற்றை வார்த்தை நான் கூடுதலாக சொல்லவில்லை. அநத பையன் தெரித்து ஓடி வந்து விட்டான்.


எனக்கு அந்த பெண்ணை பெற்றவர்களை பார்த்து, கையெடுத்து. கும்பிட வேண்டும்!. ஒரு பெண்ணை எப்படி எல்லாம், வளர்க்க கூடாதோ? அப்படி எல்லாம் வளர்த்து வைத்ததற்காக! என்ன செய்வது? ரொம்ப வருத்தத்தில் இருந்த அந்த பையனுக்கு, இந்த மாதம் திருமணம்.

பெண் குழந்தைகளுக்கு ஓவராக செல்லம் கொடுத்து, அவள் சொன்னதை எல்லாம், அப்படியே பிள்ளை வீட்டாரிடம் சொல்லும் பெற்றோர்கள் . ஓவராக ஆசைப்படும் பெண்ணின் பெற்றோர்கள்.! . பையன் வீட்டார் வரதட்சணை கேட்டதை,

சமுதாய குற்றமா? என தன் திருமண வயதில் வாய் கிழிய பேசிய ஆண்கள், இன்று தன் வீட்டு பெண்ணுக்கு திருமணம் பேச, பையன் வீட்டில், சொந்த வீடு, கார் எல்லாம் இருந்தால் தான் பெண்ணை கட்டி கொடுப்பாராம்.நல்ல குடும்பமா? பெண்ணை நன்றாக பார்த்து கொள்வார்களா? என்பது எல்லாம் கேட்பதில்லை. முதல் வார்த்தை, ஹலோவுக்கு பிறகு, பையன் எவ்வளவு சம்பளம் வாங்கறான்? என்பது தான் முதல் கேள்வி.


பி.ஈ படித்து 20, 000 சம்பளம் வாங்கும் ஒரு பெண்ணுக்கு பிஈ, எம்பிஏ, படித்த பையன் வேண்டுமாம். பி.காம்., எம்பிஏ என்றால், வேண்டாமாம். படிப்பு குறைவாம். பி.ஈ படித்தவர்களின் நிலை, இப்போது எப்படி இருக்கிறது? என்று கூட தெரியாதவர்கள், அதே பிஈ படித்த, தன் மகளை விட இரண்டு வயதே பெரியவனான, அந்த பையனுக்கு ஒரு லட்சம் சம்பளம் எப்படி கிடைக்கும்? என்று , செலக்டிவ் அம்னீஷியாவில் மறந்து போகும் சஞ்சய் ராமசாமிகள்!

மணல்கயிறு என்று ஒரு படத்தில், பத்து கண்டிஷன் போட்டு எஸ்.வி.சேகர் ஒரு பெண்ணை தேடுவார். நம்ப விசு, ஒரு கண்டிஷனுக்கு கூட தேறாத ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்து, அவரை திருத்துவார்.இப்போது இருக்கும் பெண்ணை பெற்றவரை திருத்த, உத்திரமேரூர் நாரதர் இல்லை,!அந்த தேவலோகத்து நாரதரே வந்தாலும் திருந்தாத பிரகஸ்பதிகள் இவர்கள். இந்த நிலைமையும் மாறும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *