யாழில் சைவ உணவகமொன்றில் சுகாதார அதிகாரியினால் சோதனையிட்ட போது காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்.!!

செய்திகள்

யாழ்ப்பாணத்தில் பிரபல சைவ உணவகம் ஒன்றில் கடந்த மாதம் 04.12.2022ம் திகதி வடையில் கரப்பான் பூச்சி காணப்படுவதாக முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டது.முறைப்பாட்டை அடுத்து யாழ்.சிவன் கோவிலடியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகம், அன்றையதினமும் மறுதினமும் யாழ் நகர் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் பரிசோதிக்கப்பட்டது.


இதன்போது பல்வேறு குறைபாடுகள் இனங்காணப்பட்டது. அத்துடன் குறித்த உணவகத்திற்கு வடை தயாரித்து வழங்கும் சமையற்கூடமும் இனங்காணப்பட்டது.பொது சுகாதார பரிசோதகரின் பரிசோதனையில் அங்கும் குறைபாடுகள் இனங்காணப்பட்டது.

இதனையடுத்து தனித்தனியாக உணவகத்திற்கும், சமையற்கூடத்திற்கும் எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் 06.12.2022 அன்று பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் ஆல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இதையடுத்து உணவகத்தினையும் சமையற்கூடத்தினையும் வழக்கு நடவடிக்கைகள் முடிவுறுத்தப்படும் வரை சீல் வைத்து மூடுமாறு நீதிமன்றம் கட்டளையிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *