21ஆம் திகதி வெளிவரவுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பு..!!

செய்திகள்

எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் எனவும், அதில் பொது வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க களமிறங்கவுள்ளதாகவும் செய்திகளின் வெளியாகியுள்ளன.ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே வைப்பதற்கான நடவடிக்கையில் அரசாங்கம் தீவிரமாக செயற்படுகின்றமையினாலேயே உள்ளூராட்சி மன்றத் தேர்தலை குறுகிய காலத்திற்கு மீண்டும் ஒத்திவைப்பதற்கான முயற்சிகளை ஆளும் தரப்பு எடுத்துள்ளது.


அவ்வாறு முன்கூட்டியே வைக்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை களமிறக்குவதற்கான முயற்சிகளை ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுத்துள்ளது என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் அடிப்படையில், நவம்பர் இறுதி வாரத்தில் அல்லது டிசம்பர் மாதம் முடிவடைவதற்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் இயலுமை குறித்து அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது. ள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு பல்வேறு அறிவிப்புக்களை விடுத்துள்ளதுடன் கட்டுப்பணம் செலுத்துவதில் அரசியல் கட்சிகள் மும்முரமாக செயற்பட்டு வருகின்றன.


ஆனால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதெனவும், தற்போது தேர்தல் ஒன்றுக்கு செல்வது என்றால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் என்றும் ஆளும் கட்சி கூறி வருகின்றது.

அரசாங்கத்தின் முழு முயற்சிகளும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான செயற்பாடுகளாகவே இருக்கின்றன. எவ்வாறாயினும், எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்பொன்று வெளிவரவுள்ளது.

ஆனால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பதன் பின்னணியில் ஜனாதிபதி தேர்தல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.எதிர்வரும் நவம்பர் மாதம் முதல், அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான அதிகாரம், நிறைவேற்று அதிகாரத்திற்கு கிடைக்கின்றது.


இந்த அதிகாரத்தை பயன்படுத்தி டிசம்பர் இறுதியில் அல்லது அதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்தின் உயர்மட்டம் அவதானம் செலுத்தியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *