இந்த புத்தாண்டில் பல முக்கிய கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. இப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். கிரகங்களில் சனி, குரு, ராகு, கேது போன்ற கிரகங்கள் ராசியை

மாற்றுவதற்க பல மாதங்கள் ஆகும். இதனால் இந்த கிரகங்களின் தாக்கம் மற்ற கிரகங்களை விட சற்று அதிகமாவே இருக்கும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அதாவது ஜனவரி 17 ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசிக்கு செல்கிறார்.
30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசிக்கு செல்லும் சனி பகவான், அந்த ராசியில் 2025 ஆம் ஆண்டு வரை இருப்பார். கும்ப ராசிக்கு சனி பகவான் நுழைந்ததும், அதன் விளைவாக 5 ராசிக்காரர்கள் சனியின் பிடியில் சிக்கவுள்ளார்கள். அதில் 3 ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது. 2 ராசிக்காரர்களுக்கு அஷ்டம மற்றும் அர்த்தாஷ்டம சனி தொடங்குகிறது. இப்போது 2023 ஆம் ஆண்டில் நடக்கும் சனிப் பெயர்ச்சிக்கு பின் எந்தெந்த ராசிக்காரர்கள் சனியின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
மகரம்மகர ராசிக்காரர்களுக்கு 2023-ல் நடக்கும் சனிப்பெயர்ச்சிக்கு பின் ஏழரை சனியின் கடைசி கட்டம் தொடங்குகிறது. எனவே இந்த காலம் மகர ராசிக்காரர்களுக்கு சற்று கடினமாகவே இருக்கும். இந்த காலகட்டத்தில் உடல் ரீதியாக, மன ரீதியாக மட்டுமின்றி, நிதி ரீதியாகவும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஆகவே 2023 ஆம் ஆண்டில் மகர ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கும்பம்2023-ல் நடக்கும் சனிப் பெயர்ச்சிக்கு பின் கும்ப ராசிக்கு ஏழரை சனியின் இரண்டாவது கட்டம் தொடங்குகிறது. எனவே கும்ப ராசிக்காரர்கள் 2023 ஆம் ஆண்டில் சற்று கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். அதோடு, எந்த ஒரு முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன்பும் நன்கு சிந்திக்க வேண்டும்.
மேலும் தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். சனி பகவான் கும்ப ராசியின் அதிபதி என்பதால், பிரச்சனைகளை மட்டுமே கொடுக்காமல் சற்று நற்பலன்களையும் வழங்குவார். இருப்பினும் இந்த ஆண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாகவே இருக்கும்.
மீனம்2023 ஆம் ஆண்டில் நடக்கும் சனிப்பெயர்ச்சிக்கு பின் மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் முதல் கட்டம் தொடங்குகிறது. ஜோதிடத்தில் ஏழரை சனியில் 3 கட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு பலன்களைப் பெறக்கூடும்.
அதில் ஏழரை சனியின் முதல் கட்டம் நடக்கும் ராசிக்காரர்கள் நிறைய சிரமங்களை சந்திக்க நேரிடும். இந்நிலையில் கும்ப ராசிக்கு சனி பகவான் சென்ற பின்னர், மீன ராசிக்காரர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
கடகம்2023-ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியால் கடக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சனி செல்வதால், கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி தொடங்குகிறது. இதனால் கடக ராசிக்காரர்கள் சனியின் தாக்கத்தால் பல சிரமங்களுக்கு ஆளாவார்கள். பண பரிவர்த்தனைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இழப்புகளை சந்திக்க நேரிடும். மேலும் உடல் ரீதியாகவும் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளதால், ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

விருச்சிகம்விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2023 சனிப்பெயர்ச்சிக்கு பின் அர்த்தாஷ்டம சனி தொடங்குகிறது. இந்த சனியின் தாக்கத்தால் விருச்சிக ராசிக்காரர்கள் அதிக சர்ச்சைகளில் சிக்க நேரிடும் என்பதால் தேவையற்ற சண்டைகளில் இருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறது. தொழில் மற்றும் வேலைக்காக நிறைய அலைச்சலை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த ராசிக்காரர்கள் சனிக்கிழமை தோறும் சனி பகவானை வழிபட்டு வந்தால், சனியின் மோசமான தாக்கத்தை சற்று குறைக்கலாம்.