சீகிரிய குன்றிலிருந்து சூரிய உதயத்தை காண்பதற்கான வசதி மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.நாளை தொடக்கம் இந்தக் காட்சியை பார்வையிட முடியும் என்று மத்திய கலாசார நிதியம் அறிவித்துள்ளது.

கூடுதலான சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கோடு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.நாளாந்தம் அதிகாலை 5.30இற்கு சீகிரியா குன்றின் மீது ஏறுவதற்கான பற்றுச்சீட்டுக்கள் வழங்கப்படவுள்ளன.

இலங்கை வரும் சுற்றுலா பயணிகள் சீகிரியா குன்றினை பார்வையிட ஆர்வம் காட்டுகின்றனர்.குறிப்பாக உயரமான பகுதியிலிருந்து தெளிவான சூரிய உதயத்தை காண விரும்புகின்றமை குறிப்பிடத்தக்கது.