இந்த ராசிக்காரர்களுக்கு பணம் தொடர்பான கவலைகள் நீங்குமாம்..!!

ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரையிலான 13 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 13 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். 2023 ஜனவரி 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்…


மேஷம்மேஷ ராசிக்காரர்களே! இன்று உங்கள் மனதில் நிறைய குழப்பங்கள் இருக்கும். மனதளவில் நன்கு உணரமாட்டீர்கள். குழந்தைகளால் உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கலாம். உங்களின் பிரச்சனைகள் தீரும். நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று உங்களால் அதிகமாக சேமிக்க முடியும். அலுவலகத்தில் உங்கள் வேலையில் முழு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. தொழிலதிபர்களுக்கு இன்று நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 7.அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை

ரிஷபம்ரிஷப ராசிக்காரர்களே! இன்று நீதிமன்ற வழக்குகளில் முடிவு உங்களுக்கு சாதகமாக வருவதற்கான வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் முழு நம்பிக்கையுடனும் ஆற்றல் மிக்கவராகவும் இருப்பீர்கள். வியாபாரிகளின் தடைபட்ட ஒப்பந்தம் இன்று நிறைவேறும். இன்று உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். நிதியைப் பொறுத்தவரை, இந்நாள் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்.அதிர்ஷ்ட எண்: 19.அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை

மிதுனம்மிதுன ராசிக்காரர்களே! இன்று வேலையைப் பொறுத்தவரை மிகவும் பிஸியாக இருப்பீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட முடியாது. இன்று உங்களின் செலவுகள் அதிகரிக்கலாம். நாளின் இரண்டாம் பகுதியில் வீட்டிற்கு விருந்தினர்கள் வரலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தொண்டை தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம்.அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 22.அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை


கடகம்கடக ராசிக்காரர்களே! இன்று உங்கள் துணையுடன் சண்டை போடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால், அது உங்கள் குழந்தைகளின் மீது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். நிதி நிலை நன்றாக இருக்கும். ஆனால் நிதி பரிவர்த்தனையை இன்று செய்யாதீர்கள். பணிபுரிபவர்கள் இன்று அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். அதேப்போல் வணிகர்கள் சட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு.அதிர்ஷ்ட எண்: 8.அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:20 முதல் இரவு 8 மணி வரை

சிம்மம்சிம்ம ராசிக்காரர்களே! இன்று நீங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பணம் தொடர்பான கவலைகள் அதிகரிக்கலாம். இன்று நிதி முடிவுகளை கவனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கலாம். இம்மாதிரியான சூழ்நிலையில் திட்டமிட்டு அனைத்து வேலைகளையும் முடிக்க முயற்சிக்க வேண்டும். வியாபாரிகள் தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு.அதிர்ஷ்ட எண்: 20.அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை

கன்னிகன்னி ராசிக்காரர்களே! இன்று வியாபாரிகளுக்கு நல்ல நாளாக இருக்கும். மிகப்பெரிய நிதி ஆதாயம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். உங்களின் முக்கியமான சில வேலைகளில் தடைகள் ஏற்படலாம். அலட்சியமாக இருந்தால் பெரிய இழப்பு ஏற்படும். ஆடம்பர செலவைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நரம்பு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம்.அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்.அதிர்ஷ்ட எண்: 11.அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை

துலாம்துலாம் ராசிக்காரர்களே! இன்று வியாபாரிகளுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். உங்களின் வேலைகளில் இருந்த தடைகள் நீங்கும். புதிதாக ஒன்றை கற்றுக் கொள்வீர்கள். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. புத்திசாலித்தனமாக செலவு செய்தால் நல்லது. குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, காபி, டீ அதிகம் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்.அதிர்ஷ்ட எண்: 9.அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை


விருச்சிகம்விருச்சிக ராசிக்காரர்களே! இன்று அலுவலகத்தில் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சதிக்கு ஆளாக நேரிடும். வணிகர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. நிதி நிலையில் ஏற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பெரிய நிதி ஆதாயம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நாள் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு.அதிர்ஷ்ட எண்: 24.அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை

தனுசு ராசிக்காரர்களே! இன்று வீட்டின் சூழல் பதட்டமாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சச்சரவு ஏற்படலாம். மேலும் உங்களின் செலவுகளும் அதிகரிக்கலாம். அலுவலகத்தில் அதிக பணிச்சுமையால் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். வணிகர்கள் இன்று சிக்கலில் சிக்க வாய்ப்புள்ளது.அதிர்ஷ்ட நிறம்: நீலம்.அதிர்ஷ்ட எண்: 10.அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:15 முதல் இரவு 8 மணி வரை

மகரம்மகர ராசிக்காரர்களே! இன்று நிதி நிலை வலுவாக இருக்கும். இருப்பினும் கடன் பரிவர்த்தனைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. தொழிலதிபர்கள் இன்று பெரிய வெற்றியைப் பெறலாம். பணிபுரிபவர்களுக்கு பெரிய முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வான நீலம்.அதிர்ஷ்ட எண்: 26.அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை

கும்பம்கும்ப ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு காதல் நிறைந்த நாளாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் போதுமான நேரத்தை செலவிடுவீர்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். பொழுதுபோக்கிற்காக நிறைய செலவிடுவீர்கள். வேலை தொடர்பான பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். வேலையாக இருந்தாலும், வியாபாரமாக இருந்தாலும், கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, கெட்ட பழக்கங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும்.அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 32.அதிர்ஷ்ட நேரம்: காலை 6 முதல் 9:50 வரை

மீனம்மீன ராசிக்காரர்களே! நிலுவையில் உள்ள உங்களின் வேலைகள் இன்று வெற்றிகரமாக முடிய வாய்ப்புள்ளது. உங்களின் பெரிய கவலை இன்று நீங்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்படும். உங்களின் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால், பிரச்சனையில் சிக்குவீர்கள். வணிகர்கள் எந்த ஒப்பந்தத்தையும் அவசரமாக ஒப்புக்கொள்ள வேண்டாம். இல்லாவிட்டால் நஷ்டம் ஏற்படும். நிதி நிலை சாதாரணமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு.அதிர்ஷ்ட எண்: 6.அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *