காதல் திருமணம் செய்யும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய பதிவு..!! அவசியம் படியுங்கள்.!

செய்திகள்

திருமணம் என்பது இரு மனங்களின் இணைவு. வாழ்க்கையின் கடைசி வரை நம்முடன் வரப்போகும் நபர் எப்படி இருக்கவேண்டும் என்று நாம்தான் தீர்மானம் செய்யவேண்டும். பெற்றோர் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம், காதல் திருமணம் இரண்டுமே ஒவ்வொரு விதத்தின் நன்மை தரக்கூடியதுதான். காதல் திருமணத்தில் உள்ள நன்மைகள் பற்றி அனுபவசாலிகள் கூறும் ஆலோசனைகளை கேளுங்களேன்.
புரிந்து கொள்ளலாம்


காதலிக்கும் போது ஒருவரின் ரசனை மற்றவருக்குத் தெரியும். என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்று தெரிந்து கொள்ளலாம். மேலும் இருவருக்கும் பிடித்தது, பிடிக்காதது, எதிர்பார்ப்பு, தேவை என அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம். திருமணத்திற்கு முன்னதாகவே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளலாம்.

மேலும் மனதளவில் தெரிந்து கொண்டு, திருமணத்திற்குப் பிறகு எதில் அனுசரித்து நடக்க வேண்டும் என்றும் முன்னதாகவே தெரிந்து கொள்ளலாம். இதனால் திருமண வாழ்க்கை ஈஸியாக அமையும். இதுவே பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணத்தில், நமக்கு துணையாக வருபவரைப் பற்றி எதுவுமே தெரியாது.

மனம் ஒத்து வாழலாம்ஸ்விட்சர்லாந்தின் ஆல்ப்ஹார்ன் இசை மழைகாதல் திருமணம் செய்தவர்கள் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை விட மனமொத்து வாழ்வார்கள். இவர்களின் வாழ்வில் ரொமான்ஸ் அதிகம் இருக்கும். காதலில் ஜெயித்துவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் அவர்களின் வாழ்க்கை இன்பமயமானதாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.


மன்னிக்கும் மனப்பான்மைகாதல் திருமணம் செய்தவர்களுக்கு ஒருவருக்கொருவர் ஏதாவது தவறுகள் செய்தால் கூட அதனை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை வரும். சின்னச் சின்ன பிரச்சினைகளுக்கு கூட சண்டை போடத் தோன்றாதாம்.

விட்டுக்கொடுக்கும் தன்மை ஏற்படும்காதல் திருமணம் என்றால் ஒருவருக்கொருவர் அட்ஜஸ்ட் மென்ட் இருக்கும். நாம் நேசித்து பார்த்து தேர்ந்தெடுத்த வாழ்க்கைத்தானே என்ற உணர்வில் ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து வாழ்வார்கள்.

மன வலிமையை தரும்நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றால் எந்த ஒரு விசயத்திற்கும் பெற்றோரைச் சார்ந்தே இருக்கவேண்டும். ஆனால் காதல் திருமணத்தில் இவ்வாறு இல்லை. எந்த ஒரு செயலையும் நாமே தைரியமாக செய்யலாம் அதற்கான மன வலிமை ஏற்படும்.


புதிய சொந்தங்கள் கிடைக்கும்காதல் திருமணத்தால் புதிய புதிய சொந்தங்கள் கிடைப்பதோடு, உறவினர்களின் எண்ணிக்கை அதிகரித்து ஒரு அழகான பெரிய குடும்பம் உருவாகும். இதுவே பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணம் என்றால் நெருங்கிய அல்லது தூரத்து சொந்தங்களிடையே தான் நடக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *