குருநாதர் ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தர் சொல்லுவார். ஒருவர் மரணம் அடைந்தார் என்றால் மட்டும் தேவதை/தேவர்கள் ஆகிவிடுவதில்லை. மரணத்தின் முன்னே அவன் எவ்வளவு கெட்டவனோ, மரணத்தின் பின்னரும் அவன் அவ்வளவு கெட்டவனே. மரணத்தினால் ஒருவன் தேவன் ஆகிவிடுவான் என்றால், அனைவரும் எப்படியோ இறந்து போவதற்கு தயார் ஆகி விடுவார்கள். ஏனென்றால், இறந்தால் அவன் தேவன் ஆகிவிடுவானே?

பல துன்பங்களுக்கு நாம் கடவுளை நிந்திக்கிறோம். உண்மையில் இறைவனின் நீதிமன்றத்தில் நமக்கு நாமே இந்த தவறுகளை செய்தேன். அதற்கு சரியான தண்டனை பெறும் வகையில் இத்தகைய பிறப்பை ஏற்றுக் கொள்கிறேன் என்று அடுத்த பிறவியின் தகுதியை நாம் தான் தேர்ந்தெடுக்கின்றோம்.
இறந்த பிறகு நாம் எதை எடுத்துச் செல்கிறோம். பல ஜென்மங்களின் பாவ புண்ணியங்கள் கணக்கு. கடைசியாக வந்த ஜென்மத்தின் பாவ புண்ணிய கணக்கு. இதை மட்டும் தான் அனைவரும் சொல்லுவார்கள். மிக முக்கியமான ஒன்றை நான் சொல்கிறேன். அதுதான் கல்வியறிவு. இதையும் தான் நாம் எடுத்துச் செல்கிறோம். இந்த கல்வி அறிவு அழியாமல் தொடர்ந்து வரும். அதனால் தான் சிலர் பிறக்கும் போதே அறிவாற்றல் மிகுந்தவர்களாக பிறக்கிறார்கள்.

இதையெல்லாம் நம்பாதவர்களுக்கு நான் சொல்லுவது, உங்கள் சிம் கார்டில் இருக்கும் பேலன்ஸ், நீங்கள் மொபைலை மாற்றினாலும் தொடர்கிறது. இதுவும் அப்படியே. எதுவுமே நம்ப மாட்டேன் என்றால் நான் கவலை பட மாட்டேன். நஷ்டம் உனக்குத்தான். நீ நம்ப வேண்டும் அல்லது நம்ப வேண்டாம் என்பது என் கவலை இல்லை.